வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் துவங்கும்| Dinamalar

வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் துவங்கும்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை- 'வட கிழக்கு பருவ மழை, இம்மாத இறுதியில் துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 29ல் துவங்கிய தென் மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், தென் மேற்கு பருவ மழை நிறைவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, இம்மாதம் நான்காம் வாரத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- 'வட கிழக்கு பருவ மழை, இம்மாத இறுதியில் துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.latest tamil newsமே 29ல் துவங்கிய தென் மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், தென் மேற்கு பருவ மழை நிறைவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, இம்மாதம் நான்காம் வாரத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துஉள்ளார்.

இந்த மழை, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என, தமிழகத்தில் தீவிரம் காட்டும்.கடந்த ஜூன் 1 முதல் செப்., 30 வரையிலான காலத்தில், தென் மேற்கு பருவ மழை, 106 சதவீதம் பெய்துள்ளது. இயல்பு அளவான 87 செ.மீ.,க்கு பதில், 92.5 செ.மீ., மழை பெய்துள்ளது.


latest tamil news


நாட்டில் அதிகபட்சமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், 122 சதவீதம் மழை பெய்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில், 101; கிழக்கு மாநிலங்களில், 82; மத்திய மாநிலங்களில், 119 சதவீதம் மழை பெய்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், முறையே, 92, 117, 104 மற்றும் 108 சதவீதமாக மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X