12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (7.10.2022 - 13.10.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சூரியன் நன்மைகளை வழங்குவார். சனீஸ்வரர் வழிபாடு நன்மையளிக்கும்.அசுவினி: சனிக்கிழமை மதியம் வரை பணம் பலவழிகளிலும் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதற்குமேல் திடீர் செலவு ஏற்படும். திங்கள் மாலை முதல் உங்கள்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (7.10.2022 - 13.10.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்


சூரியன் நன்மைகளை வழங்குவார். சனீஸ்வரர் வழிபாடு நன்மையளிக்கும்.அசுவினி: சனிக்கிழமை மதியம் வரை பணம் பலவழிகளிலும் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதற்குமேல் திடீர் செலவு ஏற்படும். திங்கள் மாலை முதல் உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் தோன்றும். நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வெள்ளி, சனியில் விருப்பம் நிறைவேறும். வருமானம் கூடும். ஞாயிறு, திங்களில் செயல்பாடுகளில் எதிர்பார்த்த நிலை இல்லாமல் போகும். செவ்வாய் முதல் தொழிலில் லாபம், பணியில் நன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.கார்த்திகை 1ம் பாதம்: ஆறாமிட சூரியனால் அரசு வழியிலான செயல்களில் நன்மை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்களில் செலவு தோன்றும். செவ்வாய் முதல் எதிர்ப்பைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் நன்மை அதிகரிக்கும்.
ரிஷபம்


latest tamil newsசுக்கிரன், கேது நன்மை வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


கார்த்திகை 2, 3, 4: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் முயற்சிகள் வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். திங்கள் மாலை முதல் திடீர் செலவும், வருமானத்தில் தடையும் ஏற்படும். அவசர செயல்கள் சங்கடத்தில் முடியும்.ரோகிணி: வெள்ளி முதல் திங்கள் மாலை வரை விருப்பம் நிறைவேறும், தொழில், உத்தியோகம் சிறப்பை தரும், குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். அதன்பின் எதிர்பாராத செலவு தோன்றும்.மிருகசீரிடம் 1, 2: திங்கள் மாலை வரை மனம் மகிழும்படியான நிலை உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். புதிய முயற்சி நன்மையாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திங்கள் மாலை முதல் எதிர்பாராத செலவும், அலைச்சலும் உண்டாகும்.
மிதுனம்சுக்கிரன், புதன், ராகு நன்மை வழங்குவர். சூரிய வழிபாடு சங்கடம் போக்கும்.மிருகசீரிடம் 3, 4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணம் நிறைவேறும். வெள்ளி, சனியில் முயற்சி வெற்றியாகும். திங்கள் மாலை முதல் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.திருவாதிரை: வெள்ளி முதல் புதன் வரை விருப்பம் நிறைவேறும், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய முயற்சி பலன் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட முயற்சி நிறைவேறும்.புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். திட்டமிட்ட செயல் நடந்தேறும், குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
கடகம்


சூரியன், சுக்கிரன், செவ்வாய் நன்மை வழங்குவர். குல தெய்வத்தை வழிபடுங்கள்.புனர்பூசம் 4: சனிக்கிழமை மதியம் வரையில் செயலில் நெருக்கடி இருக்கும். அதன்பின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். வருமானம் அதிகரிக்கும். செயல்கள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.பூசம்: கவனமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய வாரம். சனிக்கிழமை மதியம் வரை முயற்சி இழுபறியானாலும் அதன்பின் நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். மனம் மகிழும்படியான சம்பவம் நடக்கும். எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர்கள்.ஆயில்யம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம். வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் நெருக்கடிக்கு ஆளானாலும் அதன்பின் விருப்பம் நிறைவேறும் ஆதாய நிலை உண்டாகும். மூன்றாமிட சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பாதை தெரியும்.சந்திராஷ்டமம்

6.10.2022 காலை 8:52 மணி - 8.10.2022 மதியம் 12:23 மணி
சிம்மம்


சுக்கிரன், புதன், கேது, சனி நன்மை வழங்குவர். ஈஸ்வர வழிபாடு நலம் தரும்.


latest tamil newsமகம்: சனிக்கிழமை மதியம் வரை விருப்பம் நிறைவேறும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சி இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும். திங்கள் மாலை முதல் நிலை சீராகும், முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில், பணியில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.பூரம்: வெள்ளியன்று விருப்பம் நிறைவேறும். சனிக்கிழமை மதியம் முதல் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனஅழுத்தம் உண்டாகும். திங்கள் மாலை முதல் சந்திர பலத்தாலும், ஆறாமிட சனி வக்ர நிவர்த்தி அடைவதாலும் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: ஆறாமிட சனி வக்ர நிவர்த்தியாகும் வாரம். சனிக்கிழமை மதியம் முதல் திங்கள் மாலை வரை சந்திராஷ்டமத்தால் சங்கடம் ஏற்பட்டாலும் அதன்பின் முயற்சி ஒவ்வொன்றாக நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு வாழ்வுக்கு வேண்டியதை அடைவீர்கள்.சந்திராஷ்டமம்

8.10.2022 மதியம் 12:24 மணி - 10.10.2022 மாலை 5:45 மணி
கன்னி


சுக்கிரன் நன்மையை வழங்குவார். துர்கையை வழிபடுங்கள்.உத்திரம் 2, 3, 4: திங்கள் மாலை வரை செயல்கள் வெற்றியாகும். அரசு வழியிலான முயற்சி நன்மையாகும். தடைபட்ட வருவாய் வரத் தொடங்கும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடை பிடியுங்கள். வியாழனன்று நிலைமை சீராகும்.அஸ்தம்: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் விருப்பம் நிறைவேறும். செயல்கள் லாபமாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். திங்கள் மாலை முதல் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வியாழன் முதல் தடைகள் விலகும்.சித்திரை 1, 2: திங்கள் மாலை வரை முயற்சி நிறைவேறும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும். எதிர்ப்புகளை சரிசெய்து வருமானத்திற்கு வழிகாண்பீர்கள். திங்கள் மாலை முதல் அலைச்சலும் செயல்களில் இழுபறியும் உண்டாகும். வியாழனன்று எண்ணம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்

10.10.2022 மாலை 5:46 மணி - 12.10.2022 நள்ளிரவு 1:28 மணி
துலாம்


சுக்கிரன் நன்மையை வழங்குவார். விநாயகரை வழிபடுங்கள்.சித்திரை 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை என்றாலும் சந்திர பலத்தால் புதன் இரவு வரை தேவை நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடைபெறத் தொடங்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். புதன் இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் கவனம் தேவை.சுவாதி: செயல்களில் லாபம் தோன்றும். முயற்சி பலிதமாகும். விருப்பம் நிறைவேறும். உழைப்பிற்கேற்ற வெற்றியை அடைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதன் இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதுடன் சனிபகவானும் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளத்தால் விழிப்புணர்வு அவசியம்.விசாகம் 1, 2, 3: சனிக்கிழமை மதியம் வரை செயல் இழுபறியாகும் அதன்பின் நிலைமையைப் புரிந்து செயல்படுவீர்கள். தடை விலகும், வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். புதன் இரவு முதல் சில பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம்

12.10.2022 நள்ளிரவு 1:29 மணி - 15.10.2022 காலை 11:34 மணி
விருச்சிகம்


சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரன் நன்மை வழங்குவர். காளத்தீஸ்வரரை மனதில் எண்ணி செயல்படுங்கள்.விசாகம் 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதுடன் மூன்றாமிட சனியும் வக்ர நிவர்த்தி அடைவதால் விருப்பம் நிறைவேறும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். அரசு வழியிலான முயற்சி அனுகூலமாகும்.அனுஷம்: வெள்ளி, சனியில் செயல்கள் வெற்றியாகும். ஞாயிறு, திங்களில் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். செவ்வாய் முதல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். தடைகளை சரி செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும்.கேட்டை: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வருமானம் கூடும். உங்களுடைய நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். செவ்வாய் முதல் தடைபட்ட செயல்கள் விருப்பப்படி நடந்தேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
தனுசு


செவ்வாய், சூரியன், கேது, புதன் நன்மை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட வளம் உண்டாகும்.மூலம்: சாதகமான வாரம் இது. துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.பூராடம்: ஆறாமிட செவ்வாயும் பத்தாமிட சூரியனும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். சந்திர பலமும், ஞானக்காரகனின் அருளும் செல்வாக்கை அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.உத்திராடம் 1: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் வாரம். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். வருமானத்திற்குரிய வழிகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.
மகரம்


சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவர். அனுமன் வழிபாட்டால் சங்கடம் விலகும்.உத்திராடம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று உள்ளதால் யோசித்து செயல்பட வேண்டிய வாரமிது. முயற்சிக்கேற்ப நன்மை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளில் பிரச்னை உண்டாகும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.திருவோணம்: சந்திர பலத்தால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளின் வழியே நன்மை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை.அவிட்டம் 1, 2: சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. வெள்ளி, சனியில் எதிர்பார்த்த பணம் வரும். ஞாயிறு முதல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பிரச்னைகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்


ராகு, புதன், சுக்கிரன் நன்மை வழங்குவர். பெருமாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.அவிட்டம் 3, 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. சந்திர பலத்தால் எண்ணம் நிறைவேறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். ஞாயிறு திங்களில் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் முதல் சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும்.சதயம்: நன்மை அதிகரிக்கும் வாரம் இது. குடும்பத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள். தடைபட்ட செயல்களை முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்கள். அந்நியர் உதவியால் செயலில் சாதக நிலை உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3: ஆற்றல் வெளிப்படும் வாரம். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்ப்பு விலகும். அரசு வழியிலான செயலில் ஆதாயம் உண்டாகும். பணியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு பதவி உயர்வு ஏற்படும். ராசிநாதன் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவு கூடும்.
மீனம்


செவ்வாய் நன்மையை வழங்குவார். சக்தி வழிபாடு சங்கடம் போக்கும்.பூரட்டாதி 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் செவ்வாய் நன்மைகளை வழங்குவார். சனிக்கிழமை மதியம் வரை செலவு அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும். செவ்வாய் முதல் பொன் பொருள் சேரும். துணிச்சலுடன் செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். முயற்சிக்கேற்ப பலன் உண்டாகும்.உத்திரட்டாதி: வெள்ளி, சனியில் திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ஏழாமிட சுக்கிரனால் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் உடலில் சில சங்கடம் தோன்றும் என்றாலும் மனவலிமையால் அதை சமாளிப்பீர்கள்.ரேவதி: நினைத்ததை அடைந்தாலும் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். இரண்டாமிட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அந்நியரால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வக்ர நிவர்த்தியாகும் சனியின் பார்வையும், எட்டாமிட கேதுவும் உடல் நிலையில் சங்கடத்தை உண்டாக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X