கணவர் உதவியுடன் குழந்தை பிரசவித்த பெண்: சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினருக்கு மிரட்டல்

Added : அக் 07, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சீர்காழி அருகே கணவர் உதவியுடன் ஆண் குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினரை மிரட் டிய பிடித்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்,40. இவரது மனைவி பெல்சியா,35. இவர் தான் கருவுற்றது குறித்து சுகாதார செவிலியருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததுடன்,
கணவர் உதவியுடன் குழந்தை பிரசவித்த பெண்: சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினருக்கு மிரட்டல்

சீர்காழி அருகே கணவர் உதவியுடன் ஆண் குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினரை மிரட் டிய பிடித்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்,40. இவரது மனைவி பெல்சியா,35. இவர் தான் கருவுற்றது குறித்து சுகாதார செவிலியருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததுடன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாமலும் இருந்துள்ளார். கடந்த 1ம் தேதி கிராம செவிலியர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்தபோது காரைக்குடியில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக கூறிய பெல்சியா அங்கு செல்லவில்லை. வீட்டிலேயே கணவர் உதவியுடன் கடந்த 4ம் தேதி ஆண் குழந்தை பிரசவித்துள்ளார்.தகவல் அறிந்த நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெல்சியா வீட்டிற்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது நெம்மேலி கிராமத்தை சேர்ந்த இயற்கை நலம் அறக்கட்டளை நிர்வாகி சுதாகர் என்பவரின் பேச்சைக் கேட்டு, பெல்சியாவும் அவரது கணவர் ஜான் கிறிஸ்டோபரும் குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு அழைத்த டாக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-அக்-202220:30:35 IST Report Abuse
Priyan Vadanad ஏன் எவருக்கும் சுக பிரசவம் ஆகக்கூடாதா? எல்லோரும் மருத்துவமனையில்தான் பிறக்கவேண்டுமா? ஏன் இயற்கையாக நடக்க இருப்பதை செயற்கையாக மாற்ற முயலவேண்டும்?
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
07-அக்-202213:23:15 IST Report Abuse
rasaa இவர்கள் தீவிர பெந்தகொஸ்தே கிருத்தவர்களாக இருக்கவேண்டும். அவர்கள்தான் மூளை (?) சலவை செய்தபின் இப்படி நடந்துகொள்(ல்)வார்கள்
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
07-அக்-202212:51:53 IST Report Abuse
chinnakaruppan அவனவன் விருப்பம். சித்த வைத்திய முறையில் பார்த்திருப்பார்கள்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
07-அக்-202218:19:37 IST Report Abuse
RaajaRaja Cholanஅப்படியெல்லாம் விட முடியாது , நிரூபிக்க பட்ட நடைமுறைகள் இருக்கும் பொழுது அவரகள் அப்படியெல்லாம் செய்ய முடியாது , இதில் குழந்தை உயிரும் உள்ளது, அவர்கள் இருவரும் தொங்க கூட செய்யலாம் யாரும் கேட்க முடியாது , குழந்தை உயிரை பற்றி அக்கறை உண்டு அனைவருக்கும் இவர்கள் மருத்துவ முறையை நம்பாத மட கூட்டமாக இருக்கும் , அரசின் சட்டம் வழிபாட்டுகளை பின்பற்ற முடியவில்லை என்றால் , விட்டு செல்லலாம்...
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-அக்-202220:34:39 IST Report Abuse
Priyan Vadanadஏன் எவருக்கும் சுக பிரசவம் ஆகக்கூடாதா? எல்லோரும் மருத்துவமனையில்தான் பிறக்கவேண்டுமா? ஏன் இயற்கையாக நடக்க இருப்பதை செயற்கையாக மாற்ற முயலவேண்டும்? இதற்குமுன் யாருக்குமே சுக பிரசவம் நடந்ததில்லையா? அவல் சாப்பிடலாம் என்றால் அதனுடன் உமியை கலந்து ஊதி ஊதி சாப்பிடவேண்டும் என்றால் என்ன அர்த்தம்?...
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
08-அக்-202206:20:46 IST Report Abuse
RaajaRaja Cholanசுக பிரசவம் மிக சந்தோசம் , ஒரு வேலை அந்த சமயத்தில் ஏதாவது எதிர்பாரா சிக்கல் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கவே மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை , சமீபத்தில் இரண்டு அப்படி உயிர் பலி சம்பவங்கள் நடந்துள்ளன . செய்திகளிலும் வந்துதுள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X