மயிலாடுதுறை: சீர்காழி அருகே காதலியுடன் எடுத்துக் கொ ண்ட போட்டோக்களை நண்பர்களிடம் காண் பித்த காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேலையூர், மேலவெளி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரகாஷ்.20. ஜேசிபி ஆபரேட்டர். இவர், 11ம் வகுப்பு மாணவியை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பிரகாஷ் தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார். இதனை அறிந்து மனமுடைந்த அந்த மாணவி சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.