பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Updated : அக் 08, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
நார்வே: இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த
NobelPeacePrize, NobelPrize, Norway, Human Rights, நோபல் பரிசு, மனித உரிமைகள், அமைதிக்கான நோபல் பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நார்வே: இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்பட்டது.latest tamil news


நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் 3ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல், இலக்கியம் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபெர்டி ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202219:19:53 IST Report Abuse
kulandai kannan Literature and Peace Nobel prizes are always decided with ulterior motives. Time to ignore them.
Rate this:
Cancel
07-அக்-202215:34:07 IST Report Abuse
இந்திரன், PFI மற்றும் SDPIக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் வழங்கப்படவில்லை? திருமாவலவன் கேள்வி!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X