எமோஷனல் இன்டலிஜன்ஸ்; பதற்றத்துக்கிடையே எடுக்கப்படும் துரித முடிவு

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
'எமோஷனல் இன்டலிஜன்ஸ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அதீத உணர்ச்சியினிடையே எடுக்கப்படும் அறிவார்ந்த துரித முடிவு மனிதர்களுக்குத் தேவையான ஓர் முக்கிய உணர்வு ஆகும். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா? நீங்கள் இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் அற்ற சாலையில் செல்லும்போது தீடீரென வழிப்பறி கொள்ளையர்கள் உங்களை இடைமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டுகின்றனர். இந்நிலையில்
எமோஷனல் இண்டலிஜன்ஸ், துரித முடிவு, கோலா கரடி, emotional intelligence, quick decision making, pv

'எமோஷனல் இன்டலிஜன்ஸ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அதீத உணர்ச்சியினிடையே எடுக்கப்படும் அறிவார்ந்த துரித முடிவு மனிதர்களுக்குத் தேவையான ஓர் முக்கிய உணர்வு ஆகும். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா?

நீங்கள் இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் அற்ற சாலையில் செல்லும்போது தீடீரென வழிப்பறி கொள்ளையர்கள் உங்களை இடைமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டுகின்றனர். இந்நிலையில் இவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி யாரிடமாவது உதவி கேட்கலாமா அல்லது இருப்பதைக் கொடுத்துவிட்டு உயிரைத் தற்காத்துக் கொள்ளலாமா அல்லது பாலகிருஷ்ணா போல பறந்துபறந்து சண்டையிட்டு இவர்களை விரட்டலாமா என உங்களது மூளை, மூன்று ஆப்ஷன்களைக் கொடுக்கும். இதில் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வது என நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.


latest tamil newsஇதில் சிறந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வதுதான் எமோஷனல் இன்டலிஜன்ஸ். பதற்றம், பயம் சூழ்ந்துள்ள நிலையில் நீங்கள் எடுக்கும் சிறந்த முடிவு உங்கள் உயிர், உடைமையைக் காக்கும். ஆனால் பெரும்பாலானோர் மேற்கண்ட மூன்று ஆப்ஷன்களில் தவறான அல்லது சுமாரான ஆப்ஷனையே தேர்வு செய்வர். இவர்களுக்கு எமோஷனல் இன்டலிஜென்ஸ் அறவே இல்லை எனக் கூற இயலாது. குறைந்த அளவு எமோஷனல் இன்டலிஜன்ஸ் கொண்டவர்களாக இருப்பர்.

அது சரி..! அதிக எமோஷனல் இன்டலிஜன்ஸ் உள்ளவர்கள் எடுக்கும் முடிவு அவர்களுக்கு பெரிதாக என்ன பயனை அளித்துவிடும் எனக் கேட்டால், அது அவர்களது அன்றாட வாழ்க்கையை சுலபமாக்கும். மேலும் சிக்கலான சமயங்களில் பிரச்னையில் இருந்து எளிதில் தப்பிவிடுவர். மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களுக்கும் எமோஷனல் இன்டலிஜன்ஸ் உண்டு. அதிக எமோஷனல் இன்டலிஜன்ஸ் கொண்ட தாவரபட்சினிகளில் முதலிடம் பிடிப்பது ஆஸி., யைச் சேர்ந்த கோலா கரடிகள்.

கழுகு உள்ளிட்ட மாமிச பட்சினிகள் இவற்றை வேட்டையாட வந்தால் கோலா தன்னுடைய வயிற்றின் சிறிய பையில் உள்ள குட்டியை எடுத்து வெளியே வீசிவிட்டுத் தப்பிவிடும். இதனால் கோலா தனது குட்டியை கழுகுக்கு இரையாக்கிவிட்டு சுயநலமாக தன்னுயிரை மட்டும் காத்துக்கொள்கிறது என பலர் தவறாக நினைத்தனர். ஆனால் கோலா உண்மையில் தனது குட்டியைக் காக்க அவ்வாறு செய்வது பலருக்குத் தெரியாது.


latest tamil newsகருப்பையில் ஓர் குட்டியை சுமந்துகொண்டு இருக்கும் கோலா, வயிற்றில் உள்ள சிறுபையில் மற்றொரு குட்டியை தூக்கிக் கொண்டு இரை தேடச் செல்லும். அப்போது மாமிசபட்சினி விலங்குகள் தன்னை வேட்டையாட வந்தால் உடனடியாக கோலா தனது குட்டியைத் தூக்கி எறியும். இதனால் மாமிச பட்சினிக்கு இருவேறு பக்கங்களில் ஓடும் அம்மா, குட்டி ஆகியவற்றில் எதைப் பிடிப்பது எனக் குழப்பம் உண்டாகும். ஒருவேளை அம்மா அகப்பட்டு இறந்தால், குட்டி காக்கப்படும். ஒருவேளை குட்டி அகப்பட்டு இறந்தால் அம்மாவும் அதன் கருப்பையில் உள்ள குட்டியும் காக்கப்படும்.

ஆனால் கோலா தனது குட்டியை இவ்வாறு தூக்கி எறியவில்லை எனில் மூன்றுமே அகப்பட்டுவிடும். இதனால் கோலாவால் தனது சந்ததியைப் பெருக்க இயலாமல் இந்த இனமே அழிந்துபோகும். இதனைத் தடுக்கவே கோலா இவ்வாறு செய்கிறது என விஞ்ஞானிகள் பின்னாட்களில் கண்டுபிடித்தனர். இதேபோல நாம் நமது எமோஷனல் இன்டலிஜன்ஸை வளர்த்துக்கொண்டால் சிக்கலான நேரத்தில் சிறந்த முடிவைத் தேர்வு செய்து பயன்பெறலாம். இதனைப் பெற வாழ்வு அனுபவம் அதிகம் தேவை. இது தவிர புத்தக அறிவு, மானுடவியல் அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்குமார் , சென்னை இந்த விடியல் ஆட்சியிலும் இந்த மாதிரி ஏதாவது செயஞ்சால் கூட தப்பிப்பது கடினம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-அக்-202219:45:10 IST Report Abuse
சீனி ஆபத்து சுழ்னிலையில், முதலில் உயிரை காப்பாற்றிகொண்டால் மற்றதை எப்பவேணா சம்பாதித்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202218:43:13 IST Report Abuse
NicoleThomson முன்னேற்றக்காரனிடம் அகப்படும் தமிழர்கள் போல உதாரணம் எங்கும் காட்ட முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X