ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி!: தேர்தல் கமிஷன் பரிந்துரை?

Updated : அக் 08, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷன் கணிசமான தொகையை செலவிட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதற்கும் தனியாக
OneCandidate OneConstituency, India, EC, Recommend, ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி, இந்தியா, தேர்தல் கமிஷன், பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷன் கணிசமான தொகையை செலவிட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதற்கும் தனியாக செலவு செய்து வருகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உள்ளிட்டவை காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது.



latest tamil news


அதிலும், சில வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிப்பெற்றால் ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிடுகின்றனர். இதனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இரு தொகுதியில் போட்டியிட்டு வென்று, அதில் ஒன்றை ராஜினாமா செய்தால் அந்தத் தொகுதியில் ஏற்பட்ட செலவை வேட்பாளரே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.



மேலும் 33 (7) மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம் எனவும் தேர்தல் கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
10-அக்-202209:03:46 IST Report Abuse
Ravichandran Narayanaswamy விரைவில் ஆதார் கார்டை வாக்காளர் அட்டையோடு இணைக்கும் முடிக்கப்படவேண்டும். இல்லையென்றால் திமுக போன்ற ஈனக்கட்சிகள் தங்களுக்கு தானே வோட்டுப்போட்டுக்கொள்ளும்
Rate this:
Cancel
sampath - doha,கத்தார்
08-அக்-202218:15:44 IST Report Abuse
sampath எந்த நாட்டிலேயும் இல்லாத ஒரு கோமாளித்தனமான தேர்தல் இந்தியாவுல மட்டும்தான் இருக்குது , ஒருத்தன் இரண்டு இடத்தில நிற்பானாம் இரண்டும் ஜெயிச்சிட்டா ஒண்ண ராஜினாமா செய்வானாம் அந்த இடத்துக்கு திரும்பவும் தேர்தல் வைப்பானுங்களாம் பொதுப்பணத்தை இப்படி வெட்டியா தெரிஞ்சே செய்யறதுக்கு எப்படி எல்லாரும் சம்மதிக்கிறாங்க , இப்பவாவது புத்தி வந்து சரி செய்யுங்க அதுவும் மோடி வந்ததால் இது நடக்குது
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
07-அக்-202219:43:48 IST Report Abuse
krish வரவேற்கப்படவேண்டிய முடிவு. விதிகள் திருத்தி அமைக்கப்பட்டால் , மீறப்படாமல் இருக்க அரசியல்வாதிகள் முழு ஒத்துழைப்பு ( in letter and spirit) தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X