ஆத்துார்: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பைக் மெக்கானிக்கை, 'போக்சோ' சட்டத்தில், ஆத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 45; பைக் மெக்கானிக். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, செப்., 30ல் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஆத்துார் மகளிர் போலீசார், செல்வத்தை 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.