இட தகராறு - வாலிபரை தாக்கிய திமுக பிரமுகர்

Added : அக் 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி அருகே இட தகராறில் திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி மகன் பிரகலாதன்,36, லாரி டிரைவர். இவருக்கும், காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணியின் கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன்
இட தகராறு - வாலிபரை தாக்கிய திமுக பிரமுகர்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இட தகராறில் திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி மகன் பிரகலாதன்,36, லாரி டிரைவர். இவருக்கும், காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணியின் கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காத்திருப்பு இரட்டை வாய்க்கால் அருகில் அரசு புறம்போக்கு இடத்தை பிரகலாதன் என்பவர் வேலி வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.



இந்நிலையில் முன் விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் நேற்று அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றி உள்ளார். அதனைக் கண்ட பிரகலாதன் ஏன் வேலியை அகற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், அவரது மகன் அருண், தம்பி சிற்றரசன், உறவினர் வீரமணி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொண்டு பிரகலாதனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பிரகலாதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
07-அக்-202222:33:18 IST Report Abuse
Desi பத்து வருட அகோர பசி
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-அக்-202220:54:43 IST Report Abuse
Ramesh Sargam சீர்காழி அருகே இட தகராறில் திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை தாக்கினர். இதுபோன்று திமுகவினர் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள், தமிழகத்தில் அரங்கேறி கொண்டிருக்கிறது. காவல் துறை பெரிய அதிகாரி திரு சைலேந்திரபாபு தினம் தினம் அறிக்கைமட்டும்தான் விடுவார் - குண்டர்களை அழிப்போம் என்று. இதுவரை எத்தனை குண்டர்களை ஒழித்தார் என்று அவர் கூறமுடியுமா. பாவம் அவர் என்ன செய்யமுடியும். அவரும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அடிமைதான். அவர் சைக்கிள் ஓட்டத்தான் சரி. Law and order சம்பந்தப்பட்ட குற்றங்களை கட்டுக்குள் வைக்க அவரால் முடியவே முடியாது.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-அக்-202218:07:25 IST Report Abuse
Anantharaman Srinivasan ஆளும்கட்சி.. சட்டம் என் கையில்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X