10 ஆயிரம் ஹிந்துக்கள் புத்த மதத்திற்கு மாற்றம்: ஆம் ஆத்மி அமைச்சர் சர்ச்சை

Updated : அக் 08, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
புதுடில்லி : புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 10 ஆயிரம் ஹிந்துக்கள் புத்த மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர். அதில், ஆம் ஆத்மியை சேர்ந்த டில்லி சமூக நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டதும், அவரும், மதமாறியவர்களும் ஹிந்து கடவுளுக்கு பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 1956ம் ஆண்டு, அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதை
Delhi Minister, Oath, Buddhism, Event, Triggers, BJP, AAP,Rajendra Pal Gautam, religious conversion, ஹிந்து மதம், ஆம் ஆத்மி, பாஜ, புத்த மதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 10 ஆயிரம் ஹிந்துக்கள் புத்த மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர். அதில், ஆம் ஆத்மியை சேர்ந்த டில்லி சமூக நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டதும், அவரும், மதமாறியவர்களும் ஹிந்து கடவுளுக்கு பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 1956ம் ஆண்டு, அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் நேற்று முன்தினம்(அக்.,5) டில்லியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மியை சேர்ந்த ராஜேந்திர பால் கவுதம் என்ற அமைச்சர் பங்கேற்றார். அப்போது, 10 ஆயிரம் ஹிந்துக்கள், புத்த மதத்தை தழுவினர். தொடர்ந்து அவர்கள், கடவுள் மகேஸ்வரன், விஷ்ணு, பிரம்மா , கவுரி, ராமர், கிருஷ்ணர், கணபதி மற்றும் ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கையில்லை. அவர்களை வழிபட மாட்டோம். பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ராஜேந்திர பால் கவுதமும் இந்த உறுதிமொழி எடுத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவ துவங்கியது.


latest tamil newsஇதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹிந்துக்களும், புத்த மதத்தினரையும் ஆம் ஆத்மி அமைச்சர் அவமானப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையிலும், எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோ ஹிந்துக்கள் மற்றும ஹிந்துத்துவா மீது பிரிவினை ஏற்படுத்துவதாகவும், மோதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர்கள் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.latest tamil news


ராஜேந்திர பால் கவுதம் கூறுகையில், பா.ஜ., தேச விரோத கட்சி. புத்த மதம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதில், அவர்களுக்கு என்ன பிரச்னை. அவர்கள் புகார் தரட்டும். எந்த மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் அனுமதி வழங்கியுள்ளது. பா.ஜ., பொய் புகாரை தான் அளிக்கும் நான் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை. எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
08-அக்-202207:43:04 IST Report Abuse
Ravichandran Narayanaswamy பெண்களே உஷார். சமீபத்தில் திருமணம் ஆன பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. பெண்களே, நீங்கள் முதலில் இதை சிந்திக்கவேண்டும். இதை தவிர்க்க கண்டகண்ட நாய்களை காதலிக்காதீர்கள். காதலிக்கும்போது மானே தேனே என்றவன் எல்லாம் முடிந்தபிறகு பீடையே பிசாசே என்பானுங்க சிலர். காதலிக்கும்போது அவன் மட்டும் தெரிவான். திருமணம் ஆனபின் ஒரு மாமியார்-மாமனார்-நாத்தனார்-மச்சினன் என ஒரு ரௌடிக்கூட்டம் தொல்லை கொடுக்கலாம். இதை எதிர்பாருங்கள். வரதட்சணைக்கும் நல்ல வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. பெற்றோர்கள் மிக மிக நுணுக்கமாக மாப்பிளைகளை பற்றி நூறுமுறை விசாரியுங்கள். குடும்பத்தைப் பற்றி அக்கம்பக்கத்தில் விசாரியுங்கள். மாப்பிள்ளைகளை வேலை செய்யும் இடத்தில் சென்று பாருங்கள். திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை வீட்டில் அளவுக்கு மீறி தொல்லை கொடுத்தால் காவல்துறையை அணுகுங்கள். திருமணத்திற்குப்பிறகு சாராயம் கஞ்சா சிகரெட் போன்று போதையில் இருக்கும் ஆசாமிகளை ஒதுக்கித்தள்ளுங்கள். மறக்காதீர்கள். அப்படிப்பட்ட பொறுக்கிகளோடு வாழ்வதைவிட பிரிவதே மேல். கொடுத்த எல்லா பொருட்களையும் திருப்பி கொடுக்கும்படி காவல்துறையை வைத்து பேசுங்கள். இப்போதெல்லாம் 75 சதவீத இளைஞர்கள் (ஆணும் பெண்ணும்) சைக்கோக்களாக இருக்கிறார்கள். ஆண்களும் இதை பின்பற்ற வேண்டும். தற்கொலை செய்துக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். நெருப்பில் அழியாதீர்கள். இருந்து தொல்லை கொடுத்தவர்களை சிறையில் தள்ளுங்கள். "நல்ல" வக்கீல்களை அணுகுங்கள். இந்துப்பெண்களே, மற்ற மதத்தினரை காதல் செய்யாதீர்கள். இந்து ஆண்களையாவது கொஞ்சம் கண்டிக்கலாம். மத்தவங்களை ஒன்னும் பண்ணமுடியாது-திருமணம் ஆனபிறகு ஜிம்மி ஜாக்கி என்று பெயரை மாற்றி செயினில் கட்டிவிடுவார்கள். காதல் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் அஞ்சு-பைசா ஆட்கள். உஷார்.. உஷார். உஷார்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
08-அக்-202207:42:17 IST Report Abuse
Ravichandran Narayanaswamy இந்துக்களை முதல்வர் குடும்பத்தை குறிவைத்து கேவலமாக பேசிய ராஜாவை கண்டிக்க முதல்வருக்கு நேரமில்லை.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
08-அக்-202207:41:06 IST Report Abuse
Ravichandran Narayanaswamy தமிழ்நாட்டில் உழைக்காமல் இட ஒதுக்கீட்டை வைத்து மக்கள் ஏமாற்றி ஜாதி, மதத்தை அடகு வைத்து மூளை இல்லை என்ற ஒரே காரணத்தால் சலுகைகளை எல்லாம் அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு கூட்டம் மதமாற்றம் செய்துக்கொண்டு திரும்பவும் அந்த சலுகைகளை அனுபவிக்க ஆசைப்பட்டன. இதைக்கண்டித்த நீதிமன்றம் மதமாற்றம் செய்த மக்களுக்கு தலித் என்ற அந்தஸ்து இருக்காது. அவர்கள் அந்த ஜாதியை வைத்து சலுகைகளை அனுபவிக்கமுடியாது என்று சொன்னதனால் அவர்கள் தங்களை பௌத்தமதத்தினர் என்று சொல்லிக்கொள்ளப்பர்க்கிறார்கள். புத்தமதம் ஆசைகளை வெறுத்தது. ஆதலால் பௌத்தமதத்தை சேர்ந்தவர்கள் ஒரு வசதியோடு வாழமாட்டார்கள்-அரசாங்க சலுகைகளை எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே பௌத்தமதத்தை பட்டியல் இனமக்களோடு சேர்க்கமுடியாது. மதமாற்றத்தை பலமாக உச்சநீதிமன்றம் எடுத்துரைக்கவேண்டும். ஆம் ஆத்மி கட்சியினர் இந்துக்களை பௌத்தமதத்திற்கு மதமாற்றம் செய்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் காசுக்காக விலை போயிருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்கள் மனதளவில் இந்துக்கள் தான். ஒரு இந்து எவ்வளவு தான் அழுத்தம் கொடுத்தாலும் அவனால் இந்துக் கொள்கையிலிருந்து மாறமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X