ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ஒப்புதல்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த செப்.,26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்
Online Gambling, Online Rummy, Ordinance, Prohibition, Tamilnadu, Government, TN Govt, Governor, Approved, ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் சூதாட்டம், தடை, அவசர சட்டம், தமிழக அரசு, கவர்னர், ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த செப்.,26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.



latest tamil news


இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த அக்.,1ம் தேதியே கவர்னர் ஒப்புதல் வழங்கியதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் அக்.,17ம் தேதி முதல் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் சட்டமாக கொண்டுவரப்படும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202211:20:32 IST Report Abuse
राजा ON LINE RUMMY சூதாட்டத்துக்கு தடை போட்டதை பெரிய சாதனையாக கூப்பாடு போடுகிறது
Rate this:
Cancel
Rajaa -  ( Posted via: Dinamalar Android App )
08-அக்-202205:17:02 IST Report Abuse
Rajaa கவர்னர் தாமதமாக ஒப்புதல் வழங்கியதால் மேலும் ஒரு உயிர் பலியாம்..... இப்படி ஒரு ஓநாய் ஊளை... .. முதல் உயிர் பலியான போதே அரசு ஏன் மௌனமாக இருந்தது என்று அந்த ஓநாய்க்கு ஏன் தெரியவில்லை?
Rate this:
Cancel
07-அக்-202221:21:41 IST Report Abuse
ருத்ரா மிக நல்ல விஷயம் நோக்கம் நல்லதாய் இருந்தால் ஒப்புதல் கிடைக்கும் என்பது புரிந்திருக்கும் தற்கொலைகள் குறைந்தால் குடும்பம் ஒளி பெறும் வாழ்த்துக்கள் ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X