மத மாற்ற நிகழ்வில் அமைச்சர்: ஆம் ஆத்மிக்கு பா.ஜ., கண்டனம்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-புதுடில்லியில், 7,000 பேரை புத்த மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி, அதில், ஹிந்துக் கடவுள்களை புறக்கணிக்கும்படி சத்திய பிரமாணம்செய்து வைத்த, அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான ராஜேந்திரபால் கவுதமுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-புதுடில்லியில், 7,000 பேரை புத்த மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி, அதில், ஹிந்துக் கடவுள்களை புறக்கணிக்கும்படி சத்திய பிரமாணம்செய்து வைத்த, அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான ராஜேந்திரபால் கவுதமுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சமூக நலத் துறை அமைச்சராக இருப்பவர், ராஜேந்திர பால் கவுதம். இவர் சமீபத்தில் டில்லியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 7,000 பேரை திரட்டி, புத்த மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களை, ஹிந்து கடவுள்களை புறக்கணிக்கும்படி சத்திய பிரமாணம் எடுக்க வைத்தார். இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜேந்திர பாலின் நடவடிக்கைக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.



இது குறித்து, பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சியினர் புதுடில்லியில் கலவரத்தை துாண்ட முயற்சிக்கின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளோம். ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



புதுடில்லி பா.ஜ., தலைவர் அதேஷ் குப்தா கூறுகையில், ''முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார். ஆனால், அவரது அமைச்சர் ஹிந்து கடவுள்களை அவமதிக்கிறார். இதை எப்படி கெஜ்ரிவால் அனுமதிக்கிறார்,'' என்றார்.



latest tamil news


இது குறித்து ராஜேந்திர பால் கவுதம் கூறியதாவது:சட்டமேதை அம்பேத்கர்புத்த மதத்தை தழுவிய நாளில், ஒவ்வொரு ஆண்டும்இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. இந்த விஷயத்தில் யாரும் கேள்வி கேட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து பா.ஜ., தலைவர்கள் கூறுகையில்,'எந்த மதத்தையும் பின்பற்றுவது என்பதல்ல பிரச்னை. மற்ற மத கடவுள்களை அவமதித்ததைத் தான் கேள்வி எழுப்புகிறோம்' என்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
08-அக்-202201:36:38 IST Report Abuse
Priyan Vadanad வந்தே பாரத் ரயில் மீது ஒரு பசு மோதி சேதப்படுத்திவிட்டது. ரயிலின் முகம் சப்பையாகிவிட்டது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202200:11:49 IST Report Abuse
Kasimani Baskaran கம்மிகளின் மறு பதிப்புதான் இந்த ஆமாம் ஆத்மீ... இவன்கள் கால் வைத்த இடமெல்லாம் உருப்பட வாய்ப்பில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X