சீக்கிய குடும்பத்தினர் கொலை ஏன்? விசாரணையில் புதிய தகவல்கள்!

Updated : அக் 08, 2022 | Added : அக் 08, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சான் பிரான்சிஸ்கோ-அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தினரை கடத்தி கொலை செய்தவருக்கு, அந்த குடும்பத்தினருடன் தொழில் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், அந்த நபர் குற்றப் பின்னணி உள்ளவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த டாக்டர் ரந்தீர் சிங் - கிரிபால் கவுல் தம்பதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சான் பிரான்சிஸ்கோ-அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தினரை கடத்தி கொலை செய்தவருக்கு, அந்த குடும்பத்தினருடன் தொழில் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், அந்த நபர் குற்றப் பின்னணி உள்ளவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



latest tamil news


நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த டாக்டர் ரந்தீர் சிங் - கிரிபால் கவுல் தம்பதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன்கள் அமன்தீப் சிங், 39, ஜஸ்தீப் சிங், 36, அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி ஆகியோரை, மர்ம நபர் சமீபத்தில் கடத்தினார். அதே நேரத்தில் அமன்தீப் சிங்கின் மனைவி ஜஸ்பிரீத் கவுர் வீட்டில் இல்லாததால், கடத்தல்காரரின் பிடியில் இருந்து அவர் தப்பினார். இதற்கிடையே இந்தக் குடும்பத்தினரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, ஒரு இடத்தில் பணம் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஜீசஸ் மேனுவல் சால்கோடா என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், மெர்செட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில், எட்டு மாதக் குழந்தை உட்பட கடத்திச் செல்லப்பட்ட நால்வரின் உடல்களும் சமீபத்தில் மீட்கப்பட்டன. இவர்களை ஜீசஸ் மேனுவல் சால்கோடா தான் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.



போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட அமன்தீப் சிங் குடும்பத்தினர், மெர்செட் பகுதியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரக் தொழில் நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தில் ஜீசஸ் மேனுவல் சால்கோடா சில மாதங்கள் பணியாற்றியுள்ளார். அப்போது அவருக்கும், அமன்தீப் சிங் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.



latest tamil news


இதன் காரணமாக, ஜீசஸ் மேனுவல் சால்கோடா வேலையை விட்டுச் சென்றுள்ளார். அதன்பின் தொடர்ச்சியாக, அமன்தீப் சிங் குடும்பத்தினருக்கு, 'இ - மெயில்' வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக, அவர் இந்த கொலைகளைச் செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், ஜீசஸ் மேனுவல் சால்கோடா ஏற்கனவே திருட்டு வழக்கில் சிக்கி, சிறை சென்றவர். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றத்திலும் இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AarKay - Madurai,இந்தியா
09-அக்-202211:18:55 IST Report Abuse
AarKay "எந்த பாவம் செய்தாலும் "(பாவ)மன்னிப்பு" கிடைக்கும் என்றால் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்துவது".
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-அக்-202204:57:00 IST Report Abuse
N Annamalai கொடுமை
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-அக்-202213:36:38 IST Report Abuse
அசோக்ராஜ் இவ்வளோ கொடியவனா? குழந்தையைக் கூட விடாமல் கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X