ஹிந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை': கமல் சார்பில் திடீர் விளக்கம்

Updated : அக் 08, 2022 | Added : அக் 08, 2022 | கருத்துகள் (113) | |
Advertisement
சென்னை-'ஹிந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை' என்று, நடிகர் கமல் கூறியதாக, அவரது நண்பரும், எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கல்கியின், 'பொன்னியின் செல்வன்' நாவலை, அதே பெயரில் சினிமா படமாக, இயக்குனர் மணிரத்தினம் எடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து, விழா ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், 'ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக சித்தரிப்பதன் வாயிலாக,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'ஹிந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை' என்று, நடிகர் கமல் கூறியதாக, அவரது நண்பரும், எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.latest tamil newsகல்கியின், 'பொன்னியின் செல்வன்' நாவலை, அதே பெயரில் சினிமா படமாக, இயக்குனர் மணிரத்தினம் எடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து, விழா ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், 'ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக சித்தரிப்பதன் வாயிலாக, தமிழர்களின் அடையாளங்களை மாற்ற முயற்சி நடக்கிறது' என்றார். அதற்கு, ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ., தரப்பில் பலரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

.வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், 'ஹிந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. ஹிந்து என்பது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர்' என்றார்.இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.,வினர், 'ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதம் இல்லை என்றால், ஜாதி வேறுபாடுகளுக்கு ஹிந்து மதம் தான் காரணம் என்று இவ்வளவு காலமாக பேசியது தவறு என்பதை கமல் ஒப்புக்கொள்கிறாரா?' என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் கமலின் நண்பரும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் தன் 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:கமலுடன் கலந்துரையாடினேன். '10-ம் நுாற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அப்போது ராஜமகேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது.


latest tamil newsஅதுபோல எளிமையானதே ஹிந்து மதம் பற்றி, நான் சொன்ன கருத்து.'ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள், 'சைவர்' என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் 'வைணவர்' என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். ஹிந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை' என்று, என்னிடம் கமல் கூறினார். இதை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-அக்-202222:18:43 IST Report Abuse
Ramesh Sargam கமல், தான் ஒரு உளறுவாயன் என்பதை இப்பொழுதெல்லாம் அடிக்கடி பறைசாற்றிக்கொண்டிருக்கிறார். இது லேட்டஸ்ட். இவருக்கு அந்த படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் இப்படி பேசி இருந்தாலும், சமீபகாலமாக இப்படி எசகுபிசகாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாகிவிட்டது.
Rate this:
Cancel
Viki - CHENNAI,இந்தியா
10-அக்-202206:57:44 IST Report Abuse
Viki கமல் அறிவுஜீவி என்று ஆட்டுமந்தை சினிமாக்கூட்டம் - மூக்கில்லா தேசத்தில் அரைமூக்கன் ராஜா என்ற அடிப்படையில் கிளப்பிவிட்ட பிம்பம் இத்துடன் அவர் ஒரு மண்ணும் சரிவர தெரியாதவர், அரைகுறையாக புரிதல் உள்ளவர் என்று தெளிவாகிறது. முதலில் நேராக பேட்டி கொடுத்தவர் இப்பொழுது இன்னொருவர் மூலம் விளக்கம் வேறு? அந்த விளக்கத்தை fbல் வெளியிடுபவர் மத்திய அரசு முன்னாள் செயலராம் - "நீங்கதான் பேட்டியிலே சொன்னீங்க - இப்போ நீங்களே நேரிடையா விளக்கமும் குடுங்க" என்று சொல்லியிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
08-அக்-202223:19:21 IST Report Abuse
பேசும் தமிழன் இந்த அண்ணாமலை மற்றும் பிஜேபி கட்சியினர்.. தமிழக இந்து மக்களை உப்பு போட்டு சாப்பிட சொல்லி உள்ளார்கள்.. முன்பெல்லாம் இந்து மதத்தை பற்றி தவறாக பேசினால்.. யாரும் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள்.. ஆனால் இப்போது.... வச்சு செய்து விடுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X