தீபாவளி நெரிசலை சமாளிக்க விரைவில் சிறப்பு ரயில் அறிவிப்பு

Added : அக் 08, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
'சென்னை-தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 24ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. எனவே, 21ம் தேதியான வெள்ளி கிழமை அன்றே, சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டு உள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து
crowd, special train, expectation, chennai, nagerkovil, கூட்ட நெரிசல், சிறப்பு ரயில், எதிர்பார்ப்பு, நாகர்கோவில், சென்னை

'சென்னை-தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 24ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. எனவே, 21ம் தேதியான வெள்ளி கிழமை அன்றே, சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டு உள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயணியர் பட்டியலில் 220 முதல் 320 பேர் உளளனர்.

ஆம்னி பஸ்களில் வழக்கமான நாட்களை காட்டிலும், பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகின்றனs. குறிப்பாக, சென்னை - மதுரை, நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக 2,500 - 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தீபாவளியை ஒட்டி, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத ரயில்களையும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், இந்த தீபாவளிக்கு பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இன்னும் சிறப்பு ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. 'அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக போக்குவரத்து துறை கூறுவது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. எனவே, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும். அதுபோல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விரைவு ரயில்களின் காத்திருப்பு பட்டியலை கணக்கிட்டு, கூடுதல் பெட்டிகள் இணைப்பது, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது என, நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, தென் மாவட்டங்கள், கோவை தடத்தில் விரைவில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாரிவேலன் - COIMBATORE ,இந்தியா
08-அக்-202209:37:32 IST Report Abuse
பாரிவேலன் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு நாட்டில் புதிய ரயில் நிலையங்கள் அமைப்பது அவசியம். ஆனால் தற்போதைய பாஜக அரசு இருக்கின்ற ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. பெரும்பாலான மக்கள் ரயில் சேவை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும்போது புதிய ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உதாரணமாக பொள்ளாச்சி கோவை இடையே புதிய ரயில் நிலையம் கேட்டும் ரயில் நிலையங்கள் அமைக்கப்படவில்லை.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
08-அக்-202207:52:27 IST Report Abuse
Srivilliputtur S Ramesh கடல் வழி போக்குவரத்தே இதற்கு நிரந்தர தீர்வு... பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிகுதியால், ஏராளமான கஷ்டங்கள் உண்டாகின்றன. சன நெரிசலில் சிக்கி பிரயாணிகள், ( பெரும்பாலும் சென்னையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் இளைஞர்கள் ) நசுங்கிக்கொண்டே இரவு முழுக்க தென் மாவட்டங்களுக்கு பயணிப்பது வேதனையான அனுபவம். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பஸ் அதிபர்கள்...அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களிடம் ‘வாங்குவதை’ வாங்கிக்கொண்டு பிறகு, "அதிக கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுப்போம்" என்ற வெற்று மிரட்டல்கள் விடுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் பெருமக்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள். வருடா வருடம் பண்டிகைகள் வரும் சமயங்களில் அரசு தரப்பில் விடுக்கப்படும் இந்த எச்சரிக்கை அறிவிப்ப்புகளைக் கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. இது வருடா வருடம் நடக்கும் 'அறிவிப்பு சடங்கு.' ஊழலின் ஊற்றுக்கண்ணே இந்த தமிழ் நாடு அரசு போக்குவரத்துத்துறை தான். சற்றே சிந்தித்தால், இதற்கு சுலபமான தீர்வு கிடைக்கும். சென்னையிலிலிருந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சென்னையிலிருந்து, கன்னியாகுமரிக்கு கடல் வழியாக ஸ்டீமர் படகு போக்குவரத்தை ஆரம்பிக்கலாம். ஸ்டீமர் படகுகளை கடல் வழியாக இயக்கி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழக்கரை, மண்டபம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், ஆகிய கடற்கரை நகரங்கள் வழியாக கன்னியாகுமரி வரை மிக எளிதாக தென் முனைக்கு செல்லலாம். சாலை வழியாக நடக்கும் போக்குவரத்திற்கு போது ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு, ஒரு ரூபாய் ஐம்பது பைசா. கடல் வழியாக போக்குவரத்து நடத்தும் போது, ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு வெறும் ஐம்பது பைசா மட்டுமே...இந்த ஆம்னி பஸ் கொள்ளை என்பது இல்லாமலே போகும். தமிழக அரசு நல்ல முடிவெடுக்க விரும்புகிறோம்....
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
08-அக்-202206:59:24 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இதற்கு ஒரு நல்ல தீர்வு.... சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கடல் வழியாக ஸ்டீமர் படகு போக்குவரத்தை ஆரம்பிக்கலாம். மிக எளிதாக சென்னையிலிருந்து தென் முனைக்கு செல்லலாம். வழியே, நாகப்பட்டினம், தூத்துக்குடி, மண்டபம் போன்ற இடங்களை இணைத்துக்கொள்ளலாம். இந்த ஆம்னி பஸ் கொள்ளை என்பது இல்லாமலே போகும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X