சென்னை:மத்திய அரசு பணியில் இருந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் விடுவிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், உதவி செயலர்களாக பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உதவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஓசூர் - சரண்யா, பொன்னேரி - ஐஸ்வர்யா, பொள்ளாச்சி - பிரியங்கா, திருப்பூர் - ஸ்ருதன்ஜெய் நாராயணன், திண்டிவனம் - கட்டா ரவி தேஜா, செய்யார் - அனாமிகா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பத்மநாபபுரம் - கவுசிக், சேரன்மாதேவி - சபீர் ஆலம், பரமக்குடி - அப்தாப் ரசூல், துாத்துக்குடி - கவுரவ் குமார், நாகப்பட்டினம் - பனோத் முருகேந்தர், சிதம்பரம் - ஸ்வேதா சுமன் ஆகியோர் உதவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.