நாளை மறுநாள் கேந்திரியா அட்மிஷன் முடிவு

Added : அக் 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை--கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், கே.வி., பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால்,
KV School, CBSE, Kendriya Vidyalaya,  கேந்திரிய வித்யாலயா, கேவி பள்ளி, சிபிஎஸ்இ, Kendriya, கேந்திரியா,

சென்னை--கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், கே.வி., பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால், அரசு ஊழியர் மட்டுமின்றி, மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை, கே.வி.,யில் சேர்க்க விரும்புகின்றனர்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், கே.வி., பள்ளியில், ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள், 'பாலவாடிகா' என்ற பெயரில் நடப்பாண்டில் துவக்கப்படுகின்றன.பாலவாடிகா முதல் பிரிவில், 3 முதல் 4 வயது வரை; இரண்டாம் பிரிவில், 3 முதல் 5 வயது வரை; மூன்றாம் பிரிவில் 6 வயது வரை மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் பகல் 1:00 மணியுடன் முடிகிறது.கூடுதல் விபரங்களை இணையதளத்திலும், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கே.வி., பள்ளியிலும் தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202207:54:46 IST Report Abuse
duruvasar ஒவ்வொரு திரவிடியன் ஸ்டாக் எம் பி களும் தலைக்கு 5 சிபாரிசு கடிதங்கள் அனுப்பியிருப்பார்கள். இந்த மாத சில்லரை செலவுகளில் கையை கடிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X