முலாயம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

Added : அக் 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
குருகிராம் : உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல்
Mulayam Singh, Hospital, Akhilesh Yadav, முலாயம்,  மருத்துவமனை, அகிலேஷ் யாதவ், Mulayam, Mulayam Singh Yadav, முலாயம் சிங் யாதவ்,

குருகிராம் : உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

.உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முலாயம்சிங் உடல்நிலையில் கடந்த 3-ம் தேதி முதல் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் , மருத்துவமனை சென்று முலாயம் உடல்நிலை குறித்து விசாரித்தார். முலாயமின் மகன் அகிலேஷ் யாதவிடம் விசாரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202207:50:40 IST Report Abuse
duruvasar சங்பரிவாரையும், அத்வானியை யும் கதறவிட்ட பயங்கரமான மனிதர் இவர் என இவருடைய அசகாயசூரதனங்களை தொகுத்து ஒருவர் யூ ட்யூபில் போட்டிருந்தார். சங்பரிவார் என்ன, அத்வானி என்ன சம்பல் காடுகளிலிருந்து கொண்டு அந்த வழியாக செல்லும் மக்கள் இரயில் பயணிகள் என அனைத்து தரப்பினரையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்த பெரிய தாக்கூர். குதிரை படை வைத்துக் கொண்டிருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் உச்சத்திலிருந்தபோது பூலான் தேவியே அடக்கி வாசித்து கொண்டு இவருக்கே கப்பம் கட்டிக்கொண்டிருந்ததாக அந்த பக்கத்து மக்கள்சொல்வார்களாம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-அக்-202207:03:01 IST Report Abuse
Natarajan Ramanathan உபி யின் தீயசக்தி முலாயம்சிங் யாதவ்.... ஒரே வித்தியாசம் தமிழக தீயசக்தி மாதிரி ஹிந்துக்களை கேவலப்படுத்தமாட்டார்....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
08-அக்-202206:11:32 IST Report Abuse
Rpalnivelu ஆடிய ஆட்டமென்ன அடித்த கொள்ளைகளென்ன நாட்டை நாசப்படுத்தியென்ன குடும்பத்தையே கட்சியில் இறக்கியதென்ன கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X