இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ரூ 120 கோடி போதைப் பொருள் பறிமுதல்

Updated : அக் 08, 2022 | Added : அக் 08, 2022 | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் ரூ.120 கோடி போதைப் பொருள்: மஹா., குஜராத்தில் பறிமுதல் மும்பை-மஹாராஷ்டிரா மற்றும்குஜராத் மாநிலங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில், 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 கிலோ 'மெப்ட்ரோன்' என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் சிங் கூறியதாவது:குஜராத்


இந்திய நிகழ்வுகள்
ரூ.120 கோடி போதைப் பொருள்: மஹா., குஜராத்தில் பறிமுதல்மும்பை-மஹாராஷ்டிரா மற்றும்குஜராத் மாநிலங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில், 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 கிலோ 'மெப்ட்ரோன்' என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.latest tamil newsஇது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் சிங் கூறியதாவது:குஜராத் மாநிலம் ஜாம்நகர் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, புதுடில்லி மற்றும் மஹாராஷ்டிராவின் மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த 3ம் தேதி, ஜாம்நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ மெப்ட்ரோன் போதைப் பொருளை கைப்பற்றி, நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், 50 கிலோ மெப்ட்ரோன் சிக்கியது.

இதையடுத்து 'ஏர் இந்தியா'வின் முன்னாள் விமானி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகள் ஆறு பேரை பிடித்துள்ளோம். பிடிபட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 120 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.


ரயிலில் 'சீட்' பிடிக்க குழாயடி சண்டைபெண் போலீசுக்கு ரத்தக் காயம்தானே-மும்பை புறநகர் ரயிலில் இருக்கையில் அமருவது தொடர்பாக, இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விடச்சென்ற பெண் போலீஸ் ரத்தக் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே நகரிலிருந்து, பன்வெல் என்ற இடத்திற்கு சென்ற புறநகர் ரயிலில் நேற்று முன்தினம் மாலை கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பெண்கள் பெட்டியில் இருக்கையில் அமருவது தொடர்பாக, இரு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். மற்ற பயணியரால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

இதனால், ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேருல் நிலையத்தில் ரயில் நின்ற போது, பெண் போலீஸ் சாரதா உக்லே பெண்கள் பெட்டிக்கு வந்தார். இருவரையும் விசாரித்து சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால், இருவரும் பெண் போலீசை பலமாக தாக்கி, தங்கள் சண்டையை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசுக்கு சாரதா தகவல் தெரிவித்தார். ரயில் அங்கு சென்ற போது, தயாராக இருந்த ரயில்வே போலீசார், இரு பெண்களையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த பெண் போலீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தமிழக நிகழ்வுகள்
போண்டா மணியிடம் ரூ 1 லட்சம் மோசடி: வாலிபர் கைதுசென்னை:காமெடி நடிகர் போண்டா மணியிடம், 1 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அய்யப்பன்தாங்கல், வி.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் காமெடி நடிகர் போண்டாமணி. இவர், கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.


latest tamil newsஅப்போது, திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஷ் பிரீத்திவ், 34, மருத்துவ மனையில் போண்டா மணியுடன் இருந்து பழகி வந்தார். கடந்த 27ல், சிகிச்சை முடிந்து, போண்டா மணி வீட்டிற்கு வந்தார்; ராஜேஷ் பிரீத்திவும் உடன் வந்தார்.அவரை நம்பிய போண்டா மணி மற்றும் அவரது மனைவி மாதவி, ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, ராஜேஷ் பிரீத்திவிடம் மருந்து வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.

மருந்து வாங்கச் சென்ற ராஜேஷ் பிரீத்திவ் மாயமானார். சிறிது நேரத்தில், சென்னை உம்முடி பங்காரு நகைக் கடையிலிருந்து, மாதவியின் மொபைல் போனுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தது.

ஏமாற்றப்பட்டதை அறிந்த மாதவி, போரூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து, ராஜேஷ் பிரீத்திவைகைது செய்தனர். விசாரணையில், அவர், 'தினேஷ், சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள்' என, பல பெயர்களில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.


ரேஷன் அரிசி கடத்தல்: 195 பேர் கைதுசென்னை:ஒரு வாரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 195 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன் செய்திக் குறிப்பு:உணவு வழங்கல் அதிகாரிகளும், குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளும், ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செப்., 26 முதல் இம்மாதம் 2ம் தேதி வரையிலான, ஒரு வாரத்தில், கடத்த முயன்ற, 15.62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.76 லட்சம் கிலோ ரேஷன் அரிசியும்; 33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குற்ற செயலில் ஈடுபட்ட 195 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், ஐந்து பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ரூ. 16 லட்சம் சுருட்டிய வி.ஏ.ஓ., கைது: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடிகூடலுார்:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 32 பெண்களிடம், 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளை சேர்ந்த, 32 பெண்களிடம், அங்கன்வாடி ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறி, சேரம்பாடியைச் சேர்ந்த பிரேமா, 30, என்ற பெண், தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். கடந்த ஆக., மாதம் அந்த பெண்களை, ஊட்டிக்கு அழைத்து சென்று, அரசு பணிக்கான உத்தரவை வழங்கி உள்ளார்.


latest tamil newsஅதில், கூடலுாரில் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ., ஒருவரின் கையெழுத்து, சீல் மட்டுமே இருந்தது. சந்தேகம் அடைந்த பெண்கள், கூடலுார் வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில், 'பணி உத்தரவு போலியானது' என, தெரிய வந்தது.புகாரின்பேரில் கூடலுார் போலீசார் நடத்திய விசாரணையில், 32 பெண்களிடம் வசூல் செய்த, 16 லட்சம் ரூபாயை, கூடலுாரில் பணியாற்றிய வி.ஏ.ஓ., சுனில், 30, என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது.தொடர்ந்து, டி.எஸ்.பி., மகேஷ்குமார் உத்தரவுபடி, விசாரணை மேற்கொண்ட கூடலுார் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வி.ஏ.ஓ., சுனிலை நேற்று கைது செய்தனர்.


மூதாட்டியை ஏமாற்றி பணம் நகை கொள்ளைபெ.நா.பாளையம்:கோவை பெரியநாயக்கன்பாளையம், காளியண்ணன் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்,77. இவரது மனைவி சுப்பாத்தாள், 67. நேற்று மதியம், 1:00 மணிக்கு சுப்பாத்தாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது கதவைத் தட்டிய இருவர், குடிக்க தண்ணீர் கேட்டனர். மூதாட்டி தண்ணீர் எடுக்க சென்றபோது, இருவரும் வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் வைத்திருந்த, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 8 சவரன் தங்கச்சங்கிலி, 2 சவரன் மோதிரம் ஆகியவற்றை திருடினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி சப்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டனர். பின் இருவரும் நகை, பணத்துடன் தப்பியோடினர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


ஓய்வு பெற்ற இன்ஜினியரிடம் ரூ 15.72 லட்சம் மோசடிகடலுார்:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஓய்வு பெற்ற இன்ஜினியரிடம் 15 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன், 61; ஓய்வு பெற்ற தனியார் கம்பெனியின் கெமிக்கல் இன்ஜினியர். வெளிநாட்டில் வேலை தேடி, 'ஆன் லைனில்' தன் முழு விவரங்களையும் பதிவு செய்திருந்தார்.

இவரை, ஆகஸ்டு 5ம் தேதி, மொபைலில் தொடர்பு கொண்ட நபர், நியூசிலாந்தில் இருந்து பேசுவதாகவும், தன் பெயர் லாரன்ஸ் பிராங் என்றும் கூறினார். இங்கு வந்தால் மாதம் 7 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க 53 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி, அவரது வங்கிக் கணக்கிற்கு வீரபாண்டியன் தன் வங்கிக் கணக்கில் இருந்து முதல் தவணையாக 53 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். இது போன்று, இன்சூரன்ஸ், மருத்துவக் காப்பீடு எனக் கூறி, 15 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை அந்த நபர் பெற்று, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினார்.வீரபாண்டியன் அளித்த புகாரின்படி, கடலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


குட்கா விற்ற இருவர் கைதுபழநி : பழநி அடிவாரம் இட்டேரி ரோடு பகுதி கடையில் குட்கா பொருட்களை விற்ற சங்கர் 45 ,லால்பகதுார் சாஸ்திரி தெரு பகுதி கடையில் குட்கா பொருட்களை விற்ற கோகுலை 22, பழநி போலீசார் கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


ரூ 20 ஆயிரம் லஞ்சம்: பஞ்., தலைவி, கணவர் கைதுகோவை:கட்டட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஜி.என்.மில்ஸ் சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வேலன் நகரில், கட்டட வரைபட அனுமதி கோரி ஊராட்சியில் விண்ணப்பித்தார்.வரைபட அனுமதியை தன் கணவர் ராஜனை பார்த்து வாங்கிக் கொள்ளுமாறு ஊராட்சி தலைவி சாவித்திரி, 47, கூறியுள்ளார்.

கணவர் ராஜன், 63, அனுமதி வழங்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.பணம் கொடுக்க விரும்பாத கார்த்திக், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.அவர்கள் அறிவுரை படி, நேற்று மாலை, பிளிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜனிடம் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின், இருவரும் கைது செய்யப்பட்டனர்.


காதலிக்க மறுத்த பெண்ணை கடத்த முயற்சி தடுத்த தாய்க்கு கத்திக்குத்துகீழக்கரை:கீழக்கரை அருகே ஏர்வாடியில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்றதை தடுத்த தாய்க்கு கத்திக்குத்து விழுந்தது.

ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசை கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் கேரளாவில் மீன் பிடி தொழில் செய்கிறார். இவரது மகள் கோகிலாவும் 21, சேதுக்கரையை சேர்ந்த கார்த்திக் 23, என்பவரும் காதலித்துள்ளனர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கோகிலாவும் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக சேதுக்கரையை சேர்ந்த நண்பர் அஜித்தை அழைத்துக் கொண்டு சடைமுனியன் வலசையை சேர்ந்த சர்வேஸ்வரன் ஆட்டோவில் கோகிலா வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சென்றனர்.வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கார்த்திக், அஜித் ஆகியோர் கோகிலாவை கடத்த முயன்றனர்.

அவரது தாய் தேவராணி தடுக்க முயன்றார். அப்போது கத்தியால் இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆட்டோ டிரைவர் சர்வேஸ்வரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.காயமடைந்த தேவராணி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்
அமெரிக்காவில் கத்திக்குத்து 2 பேரை கொன்ற நபர் கைது


லாஸ் வேகாஸ்-அமெரிக்காவில், லாஸ் வேகாசில் மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சிலரை குத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். மர்ம நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறியதாவது: இங்கு வீதியில் நடனமாடும் சில பெண்கள், அங்கு வந்த சுற்றுலா பயணியருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், தன்னை ஒரு 'செப்' என அறிமுகப்படுத்தி, தான் வைத்திருந்த சமையல் கத்தியுடன் அப்பெண்களுடன் புகைப்படம் எடுக்க விரும்பினார். ஆனால், அவர்கள் மறுத்ததால், அந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பினார் இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நெவாடா மாகாண போலீசார் கூறியதாவது:லாஸ் வேகாசின் பரபரப்பான சாலை ஒன்றில், மர்ம நபர் ஒருவர் கத்தியால் சிலரை குத்தியுள்ளார். இதில், இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஆறு பேரில், மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 'காசினோ'க்கள், ஹோட்டல்கள் நிறைந்திருக்கும் இப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வரிசையாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பெரிய கத்தியை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்தனர். வெளி மாகாணத்தை சேர்ந்த அவரிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மருமகளை சுட்டுக் கொன்றஇந்திய வம்சாவளி முதியவர்


சான் பிரான்சிஸ்கோ-அமெரிக்காவில் மருமகளை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி முதியவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பிரெஸ்னோ நகரில் வசிப்பவர் சிடல் சிங் தோசாஞ்ச்,74. இவரது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மருமகள், குர்பிரீத் கவுர், பிரெஸ்னோ நகரில் இருந்து 240 கி.மீ., துாரத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த குர்பிரீத், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil newsஇந்நிலையில், தன் மகனை விவாகரத்து செய்ய மனு செய்த மருமகள் மீது ஆத்திரம் அடைந்த சிடல் சிங், கடந்த வாரம் காரில் சான் ஜோஸ் நகரில் உள்ள வால்மார்ட் நிறுவனத்துக்கு வந்தார்.அங்கு, வாகனம் நிறுத்துமிடத்தில் காத்திருந்து, மருமகள் குர்பிரீத் வந்த போது, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார்.இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து, சிடல் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X