
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற விழாக்களில் துாத்துக்குடி , குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவும் ஒன்றாகும்.
இந்த விழா பிரசித்தம் பெறக்காரணம் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற பல்வேறு அம்மன் உருவங்களில் தீச்சட்டி ஏந்தி வருவதுதான்.

அதிலும் அம்மன் கோவில் பிராகாரத்திற்குள் நுழைந்ததும் சிலர் அருள் மிகுதியால் நாக்கில் சூடம் ஏற்றி வழிபாடு செய்வர்.இந்தக் காட்சிகளை பதிவு செய்ய உலகமெங்கும் இருந்தும் புகைப்படக்கலைஞர்கள் இங்கு ஒன்றுகூடுவர்

இந்தப்படங்களை எடுப்பது என்பது உண்மையில் சவாலான ஒன்றாகும், அந்த சிறிய ஊரில் சிறிய சந்தில் பத்து லட்சம் பக்தர்களின் நெருக்கடிக்கு ஈடு கொடுத்து நசுங்கி பிதுங்கித்தான் படமெடுக்கவேண்டும்.

அப்படிப்பட்ட அனுபவத்துடன் சுமார் ஆயிரத்து 500 கிலோமீட்டர் துாரம் பயணித்து சென்று வந்த சென்னைவாசியான விவேகானந்தன் எடு்தத சில படங்கள் இங்கே அணிவகுக்கின்றன.
படங்கள் எம்.விவேகானந்தன்.