வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி-மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், ஜார்க்கண்டில் தான் மிக அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் அலுவலகம் சார்பில், குழந்தை திருமணம் தொடர்பாக, 2020ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
![]()
|
கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேசிய அளவில், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும் சராசரி, 1.9 சதவீதமாக உள்ளது. கேரளாவில் 0.0 சதவீதமாகவும், அதிகபட்சமாக ஜார்க்கண்டில், 5.8 சதவீதமாகவும் உள்ளது.![]()
|
அதேபோல், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடப்பதில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, 54.90 சதவீத பெண்களுக்கு, 21 வயதுக்குள் திருமணம் நடக்கிறது.
ஜார்க்கண்டில், இது, 54.56 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் தேசிய சராசரி, 29.5 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.