சீயோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு போட்டியாக தென்கொரியாவும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதில் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர 'பாலிஸ்டிக் ' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் பிரமதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
![]()
|
இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, வடகொரியா 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக் ' ரக ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது. முதல் ஏவுகணை 100 கி.மீ. உயரத்துக்கு சென்று 350 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. 2-வது ஏவுகணை 50 கி.மீ. உயரத்திற்கு சென்று 800 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. இவ்வாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement