பாகூர் : அரபிந்தோ சொசைட்டி சஞ்சீவன் குழு சார்பில், உலக நோய் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினர்.
சஞ்சீவன் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் நோக்கவுரையாற்றினார். கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.
பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை எதிரில் இருந்து துவங்கிய ஊர்வலம் கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் சஞ்சீவன் குழு முகிலன், டாக்டர்கள் மோகன்ராஜா, ஜெயா, தனியார் நர்சிங் கல்லுாரி மாணவர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, நோயாளிகளை அரவணைப்போம், முதியோர்களை பாதுகாத்திடுவோம் என்பதை வலியுருத்தி கோஷமிட்டு சென்றனர்.