வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,: சென்னையில் நடந்த, 'பிரம்மா குமாரிகள்' இயக்கத்தின் பொன் விழாவில், 'கல்ப தரு' எனும் மரம் வளர்க்கும் பசுமை திட்டத்தை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
![]()
|
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழக மண்டலம் சார்பில், பொன்விழா கொண்டாட்டம் நேற்று காலை சென்னை சேத்துப்பட்டு, லேடி ஆண்டாள் கலை அரங்கில் துவங்கியது.
'ஆசீர்வாதங்களின் சக்தி மற்றும் நல்வாழ்த்துகள்' என்ற தலைப்பில் முதல் நாள் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், பிரம்மா குமாரிகள் இயக்க கூடுதல் நிர்வாகி ஜெயந்தி பேசுகையில், ''இறைவனுக்கு கீழ்படிந்து நடக்கும் போது, ஆசீர்வாதங்கள் பெற முடியும்.
''அதேபோல், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடந்தால் ஆசீர்வாதங்களை பெற முடியும்,'' என்றார்.
மகிழ்ச்சி குறித்து, கூடுதல் பொதுச் செயலர் பிரிஜ் மோகன் பேசுகையில், ''நாம் பெறக்கூடிய இடத்தில் இருக்கும் போது, சுயநலவாதிகளாக இருக்கிறோம். ஆனால், பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது,'' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரம்மா குமாரிகள் அமைப்பினர், மனம் மற்றும் உலக அமைதிக்காக சிறிது நேரம் தியானம் செய்தனர்.
தொடர்ந்து, இயக்கத்தின் சார்பில், 'கல்பதரு' எனும் 'ஒருவருக்கு ஒரு மரம்' என்ற பசுமைத் திட்டத்தை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், ''பிரம்மா குமாரிகள் அமைப்பினரில், 75 நாட்களில் 40 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது.
![]()
|
''அரசின் பசுமை திட்டத்திற்கான, 2.8 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 32 கோடி மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. இதேபோல, பிரம்மா குமாரிகள் துவங்கிஉள்ள 'கல்பதரு' திட்டமும் பாராட்டுக்குஉரியது,'' என்றார்.
இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் பிரம்மா குமாரிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement