தர்மபுரி: தர்மபுரி ஹரிசந்திர நாதன் கோவில் தெரு சேர்ந்தவர் கவியரசு 21. இவர் நேற்று(அக்.,09) தனது நண்பர்களான கார்த்திக் 24, ராகுல் 23, சந்தோஷ், ஜீவா 22 ஆகியவருடன் தனது காரில் தர்மபுரி பெங்களூர் சாலையில் இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாட்டுக்கானுர் மேம்பாலம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் சம்பவ இடத்தில் ராகுல், ஜீவா, சந்தோஷ் ஆகியோர் இறந்தனர்.
மேலும் கவியரசு, கார்த்திக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுண் போலீசார் விசாரிக்கின்றனர்.