வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிப்பட்டு காயமடைந்த ராணுவ நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாகவும், அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 'ஜூம்' என்றழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றுள்ளது. இந்த மோதலில், பயங்கரவாதிகளுக்கிடையேயான தாக்குதலில் ராணுவ நாய் ஜூம் குண்டடிபட்டு காயமடைந்துள்ளது. நாய் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தது.

காயமடைந்த ஜூம் நாய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ராணுவ நாய் ஜூம் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டது. முறிந்த முன்பக்க காலுக்கு கட்டுப்போட்டுள்ளது. முகத்தில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த 24 - 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது.
இதனால், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜூம் நாய், டாக்டர்களின் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். காயமடைந்த போதும், அந்த நாயின் பணி காரணமாக 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு அந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.