உலகிலேயே அதிவெண்மையான சாயத்தை, கடந்த ஆண்டு உருவாக்கினர் அமெரிக்காவிலுள்ள பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அந்த அதிவெண்மைச் சாயம் 98 சதவீத சூரிய ஒளியை பிரதிபலித்துவிடும்.
இதனால், அந்த அதிவெண்மையைப் பூசிக்கொண்ட கட்டடங்கள், சுட்டெரிக்கும் சூரிய ஒளியோடு வெப்பத்தை யும் உள்வாங்காமல் பிரதிபலித்துவிடும். இதனால், அந்த கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு குளிரூட்டும் கருவிகள் தேவைப்படாது.
இந்தச் சாயத்திலுள்ள பேரியம் சல்பேட் உள்ளிட்ட சில கனிமங்கள் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும் திறனைத் தருகின்றன.
பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானி கள், அந்த வெண்மைச் சாயத்தை வாகனங்கள் மற்றும் விமானங்களுக்குப் பூசும்படி செய்ய முடியுமா என்று தொடர்ந்து ஆராய்ந்தனர்.
அதன் விளைவாக, தற்போது மிகவும் எடை குறைவான, தடிமன் குறைவான அதிவெள்ளைச் சாயத்தை உருவாக்கி உள்ளனர்.