காஷ்மீர் பிரச்னைக்கு நேரு கொண்டு வந்த 370 சட்டப்பிரிவு தான் காரணம்

Updated : அக் 13, 2022 | Added : அக் 13, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
காந்திநகர்: முன்னாள் பிரதமர் நேரு ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை கொண்டு வந்ததே பிரச்னைக்கு காரணம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு பிரித்தது.இந்நிலையில் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில்
Jammu and Kashmir, Jawaharlal Nehru, Amit Shah, நேரு, அமித்ஷா, பாஜ, ஜவஹர்லால் நேரு,  Kashmir problem, Nehru,  BJP, ஜம்மு காஷ்மீர், காஷ்மீர் பிரச்னை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காந்திநகர்: முன்னாள் பிரதமர் நேரு ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை கொண்டு வந்ததே பிரச்னைக்கு காரணம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு பிரித்தது.



இந்நிலையில் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., கவுரவ யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்து பேசியது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-க்கு ஒப்புதல் அளித்தது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த மிகப் பெரிய தவறு.


latest tamil news

இதன் காரணமாகவே அந்தப் பகுதியை நம் நாட்டோடு முறையாக ஒருங்கிணைக்க முடியாத நிலை இருந்து வந்தது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்க அனைத்து தரப்பினரும் விரும்பினார்கள். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வந்ததை அடுத்தே ஒரே அடியாக சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நம் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.



டுவிட்டரில் மோதல்



காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் பங்கு குறித்து வரலாற்று பொய் சொல்கிறார் ஜெய் ராம் ரமேஷ் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டார். இதனை மறுத்த காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உண்மையான வரலாறு கிரண் ரிஜிஜூவுக்கு தெரியவில்லை. உளறுகிறார் என டுவிட்டரில் கருத்து தெரிவி்த்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (30)

Mohan - Salem,இந்தியா
14-அக்-202209:41:25 IST Report Abuse
Mohan ஜவாஹிருல்லா என்ற சொந்த பெயரை மறைத்த நேரு செய்த இமாலய தவறு காஷ்மீர் விஷயத்தில் ஷேக் அப்துல்லாவை கண்ட்ரோல் இல்லாத சர்வாதிகாரி ஆக்கியது. காஷ்மீர் பகுதிகளை பாக்கிஸ்தானின் மலைப்பகுதி காட்டுமிராண்டிகள் கைப்பற்ற உதவியது. பாகிஸ்தானிலிருந்து வந்த இந்திய அகதிகளின் முகாம்களில் கனிவற்ற முறையில் அவர்களுக்கு "முஸ்லிம்கள் மீது பழி வாங்கும் உணர்ச்சி"" ஏற்படக்கூடாது என்று ""உபதேசம்"" செய்து தான் யார் பக்கம் என காண்பித்தார். அரசு பணத்தை வீணடித்து நேருவின் "பேவரிட்" சிகரெட் வாங்க விமானத்தை தனியாக அனுப்பிய சாதனை தெரியுமா? கேரள மாப்ளா முஸ்லிம்களின் வெறியாட்டத்தில் இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதிற்கு வருந்தாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்த ""மகாத்துமா காந்தியின்"" அறிவுரை கட்டுரைக்கு அண்ணல் அம்பேத்கர் வருத்தப்பட்டும் கண்டித்தும் எழுதிய நீண்ட கட்டுரையை வெட்ட வெளிச்சமாக்கினால்... நாறிடும் இவர்கள் மானம் நாடு கொந்தளிக்கும். சே என்ன கொடூரர்கள்??
Rate this:
Cancel
14-அக்-202208:11:08 IST Report Abuse
பேசும் தமிழன் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த போதே... யாருக்காக நாட்டை பிரித்தார்களோ... அந்த மதத்தை சேர்ந்த ஆட்களை அனுப்பாமல்... இங்கே இருக்க விட்டு.. அவர்களுக்கு சலுகைகளையும் வழங்கிய.. நேரு மற்றும் காந்தி அவர்கள் தான்.... நாடு நாசமாக போக காரணம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-202207:58:59 IST Report Abuse
Kasimani Baskaran சரத்து 370 என்பது ஒரு நிரந்தரமான சட்டம் கிடையாது. அதாவது அது ஒரு தற்காலிக ஏற்பாடு. அதை சுதந்திரம் வாங்கி பத்தாண்டுகளுக்குள் நீக்கியிருக்கலாம். தேவையில்லாமல் காஷ்மீருக்கு ஏறாளமாக நாட்டின் செல்வத்தை (உள்நாட்டு உற்பத்தியில் 11%) அள்ளிவிட்டு தீவிரவாதத்தை மட்டுமே காங்கிரஸ் வளர்த்து எல்லைகளை பலவீனமாக்கத்தான் உதவியது. காஷ்மீரில் சட்டமில்லாமல் அனுபவித்தது ஒரு சில குடும்பங்கள்தான் - அதுவும் இந்தியச்சொத்துக்கள் இங்கிலாந்துக்கும், ஸ்விட்ஜர்லாந்துக்கும் சென்றதுதான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X