வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
காந்திநகர்: முன்னாள் பிரதமர் நேரு ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை கொண்டு வந்ததே பிரச்னைக்கு காரணம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு பிரித்தது.
இந்நிலையில் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., கவுரவ யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்து பேசியது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-க்கு ஒப்புதல் அளித்தது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த மிகப் பெரிய தவறு.
![]()
|
இதன் காரணமாகவே அந்தப் பகுதியை நம் நாட்டோடு முறையாக ஒருங்கிணைக்க முடியாத நிலை இருந்து வந்தது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்க அனைத்து தரப்பினரும் விரும்பினார்கள். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வந்ததை அடுத்தே ஒரே அடியாக சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நம் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
டுவிட்டரில் மோதல்
காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் பங்கு குறித்து வரலாற்று பொய் சொல்கிறார் ஜெய் ராம் ரமேஷ் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டார். இதனை மறுத்த காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உண்மையான வரலாறு கிரண் ரிஜிஜூவுக்கு தெரியவில்லை. உளறுகிறார் என டுவிட்டரில் கருத்து தெரிவி்த்தார்.
Advertisement