வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாக்தாத்: ஈராக்கில் பார்லிமென்ட்டை குறி வைத்து அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார். ஈராக் அதிபர் தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
![]()
|
இந்நிலையில் இன்று பார்லிமென்டை குறி வைத்து அடுத்தடுத்து 9 முறை ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாக்கப்பட்ட பசுமை பகுதி என்றாலும் இங்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், அரசு அலுவலங்கள் உள்ளன.
பாராளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்ற சம்பவம் கடந்த மாதம் பார்லிமென்ட் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர இருந்த சில நிமிடத்திற்கு முன்பாக ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.