'ஹிந்து' என்று பெயர் வர, 1,000 காரணங்கள் இருக்கட்டும். அவற்றை ஆராய்ந்து, அதில் ஏதேனும் புலப்படாத போது, இவர்களாகவே ஒரு கற்பனை ஓட்டை போட்டு அரசியல் லாபம் பார்கிறார்கள் மற்றும் மொழி பிரிவினை பேசி அரசியல் நடத்துகிறார்கள்.
மக்களை ஏமாற்றுவது, ஓட்டு வியாபாரம் செய்வது என சிந்திக்கும் நபர்களுக்கு தெரியுமா, ஹிந்து என்றால் தலையாய மத உணர்வு என்று!
கறிக்கு வளர்க்கும் ஆடு, கோழி போன்று, அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு வாழும் நம் மக்களுக்கு யார் வந்து உரைத்தால் புரியும் என தெரியவில்லை!
ஹிந்துவை எடுத்து விட்டால், மதம் என்று ஒன்றும் இருக்காது என்று எவராலும் சொல்ல முடியுமா?
அரசியல் வியாபாரிகளால், அப்படி பேசத் தான் முடியுமா?
பொது சேவைகளுக்கு நல்ல ஒழுக்கம், சிந்தனை, அனைவரும் சமம் என்ற பார்வையுள்ள மனிதர் தேவை; இப்படி, மக்களை முட்டாளாக்கும், வன்முறைக்கு துாண்டி வரும் நபர்கள் அல்ல!
மக்களே-, இந்நாடு அனைத்து மக்களுக்கான கதம்பம் மாலை போன்றது. அவற்றை, குரங்குகளிடம் ஒப்படைப்பது, முட்டாள் தனம் அல்லவா!
ஹிந்து என்றாலே வாழ்வாதாரம், மருத்துவம், ஞானம் இதை அனைத்தையும் தாண்டி, எவ்வளவு பெரிய கலாசாரம் என்பதை, மக்கள் சிந்திக்க வேண்டும்.
கோவில் என்பது, கடவுளின் வசிப்பிடம் இல்லை எனலாம்; ஆனால் அங்கே உள்ள சிற்பங்கள் அனைத்தும் பாதுகாப்பு பெட்டகம். அவற்றை ரசிக்கும் போது, நாமே கடவுளாக மாறுகிறோம்.
அந்த அறிவியல் ஞானத்தை நமக்கு தருவதோடு, பழங்கால மக்கள் வாழ்ந்த முறைமைகள் அனைத்தையும் நமக்கு சிற்ப வடிவங்களா சொல்லும் ஒளிக்காவியம் தான் கோவில்.
இக்கோவில்கள் மூலம் சிற்ப கலை வளர்கிறது; சிற்பிகள் வாழ்கிறார்கள். பூஜை பொருட்கள் விற்பனையால், பண்டிகையால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. பலரின் வாழ்வாதாரத்தை கெடுப்பதில், சில பதர்களுக்கு அத்தனை ஆனந்தம்!
அதே ஆனந்தம், பிற மதங்களின் மேல் அவர்களுக்கு வருவதே இல்லை.
தீபாவளி, பொங்கல் என பண்டிகை அனைத்தையும் ஒழித்து விட்டால், எத்தனை லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரியுமா?
பஞ்சு உற்பத்தி, துணி, ஆடை, பருப்பு, எண்ணெய், நெல், பலகாரம் என, பல தொழில்கள், பண்டிகையை நம்பி உள்ளன. அதை செய்யும் மக்களை எல்லாம் என்ன செய்வது?
இத்தனை தொழில்களிலும் ஜாதி, மதம் பிரித்து வியாபாரம்நடப்பதில்லை. யோசித்துப் பாருங்கள், உண்மை அப்பட்டமாக புரியும்.
பிரிவினை என்பது, எந்த மதத்தில் இல்லை?
ஆனால் ஹிந்து என்பது மதம் மட்டும் அல்ல; சரித்திரம், வாழ்வாதாரம், கலாசாரம். இதை மறைத்து, மக்களின் மனதில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர், மத ஏஜன்டுகளின் கைக்கூலிகள்!
மறந்து விடாதீர்... இந்நாட்டின் அதிசயங்கள் முதல் ஆச்சரியம் வரை அனைத்தும் ஹிந்து தான்!
வாழ்வாதாரம், கலாசாரம், மருத்துவம் இன்னும் எத்தைனயோ ஆற்றல்கள் ஒன்று திரண்ட பாதுகாப்பு பெட்டகம் தான் ஹிந்து!
அனைத்தும் அறிந்து, வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு, இதை அறியாதது போல் பாவனை செய்வதை உடன் நிறுத்துங்கள், 'திராவிட' அரசியல்வாதிகளே!
-- ரா.அர்ஜுனமூர்த்தி
பா.ஜ., அவிவுசார் பிரிவு முன்னாள் தலைவர்