வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி : ''மத்திய பா.ஜ., அரசு ஹிந்தியை திணிக்க முனைப்புடன் செயல்படுகிறது,'' என, சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி கூறினார்.
காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: கல்லுாரியில் இருந்தே ஹிந்தியில் பாடத்திட்டம் இருக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. இது, மிகவும் அபாயகரமானது. அரசுக்கு வரும் கடிதம் அனைத்துமே, ஹிந்தியிலேயே இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஹிந்தியை திணிப்பதில், பா.ஜ., அரசு முனைப்பாக உள்ளது.
![]()
|
ராகுல் பாத யாத்திரை, அனைத்து மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. நேரு குடும்பத்தை சாராதவர்கள் இதற்கு முன் கட்சித் தலைவர்களாக இருந்துள்ளனர். அடிப்படை தொண்டனின் மானசீக தலைவராக, ராகுல் இருக்கிறார். யார் தலைவராக வந்தாலும், நேரு குடும்பத்தை சார்ந்தவர்களின் அறிவுரைப்படி தான் காங்., தலைமை நடக்கும். சசி தரூரை வாபஸ் வாங்கச் சொல்லி, யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை.
இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. அ.தி.மு.க., பலமான கட்சி. ஆனால், நான்காக பிரிந்து கிடக்கிறது. பா.ஜ., அரசின் மீது உள்ள வெறுப்பின் காரணமாக, அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும். அதற்கு அச்சாணியாக காங்., இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.