வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: ஏர் விஸ்டாரா விமானத்தில் சென்ற ஒரு பயணி, தனக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விமான நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், சமூக வலைதளத்திலும் புகைப்படத்தை பதிவு செய்தார்.
ஏர் விஸ்டாரா விமானத்தில் பயணித்த நிகில் சோலங்கி என்பவருக்கு உப்புமா, இட்லி சாம்பார் பாக்கெட் வழங்கப்பட்டது. பிரித்து பார்த்த போது சிறிய கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அதனை மொபைலில் புகைப்படமாக எடுத்து தனது டுவிட்டரில் பதிவேற்றினார். மேலும் விமான நிறுவனத்திடம் புகார் அளித்தார். இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததற்காக மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
புதுடில்லி: ஏர் விஸ்டாரா விமானத்தில் சென்ற ஒரு பயணி, தனக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விமான நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், சமூக
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement