வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் வரும் 19-ம் தேதி மெகா ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்த தனது சொந்த மாநிலத்திற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை துக்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் காந்திநகரில் 12-வது மெகா ராணுவ தளவாடங்கள் கண்காட்சி வரும் 19-ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
![]()
|
இதுகுறித்து ராணுவ அமைச்சக செயலாளர் அஜெய் குமார் கூறியது, வரும் 19-ல் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவங்குகிறது. இதில் 25 நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் , 75 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த, 1320 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சியின் போது 400 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.