வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்? என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்..
இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது: தீண்டாமையை கடைப்பிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இன்னும் நடக்கின்றன.
* தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுறுகிறது. இந்த கொடுமை ஏன்?.
* பட்டியலின பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது.

*பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளில் இருந்து தப்புவதால் தான் குற்றங்கள் தொடருகின்றன.
* தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கின்றன.
* இன்னும் பல இடங்களில் பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.
* இந்தியாவில் கல்வித்துறையில் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 28 சதவீதம் பேர் பள்ளி செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளி செல்லவில்லை.
* ஆனால் தமிழகத்திலோ 51 சதவீத குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இது சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது. இதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.