வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கவர்னரிடமும் பிரச்னை செய்வேன் என செயல்பட்டு வருகிறார். துணைநிலை கவர்னருனா அவருக்கு அலர்ஜி என புதுச்சேரி கவர்னர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் சொங்காவதே ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து கவர்னர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்காகத்தான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது. நான் மக்களை பார்க்க கூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது? . கவர்னர் அன்போடு மக்களை சந்தித்து குறைகேட்பதில் என்ன தவறு?.

மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதை அதிகாரிகளுக்கு சொல்வதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டமே. அதிகாரிகள் தினமும் மக்களை எளிதில் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்கு முதல்வர் எப்போதும் தடை போட மாட்டார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி அன்று இருந்த கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார். மேலும் துணைநிலை கவர்னருனா அவருக்கு அலர்ஜி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.