வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் 'விடியலை எதிர்பார்த்தோம்; ஏமாற்றமே உள்ளது' என்ற ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரால், தி.மு.க., நிர்வாகிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க., அரசு புறம்தள்ளியதாக, போக்குவரத்து கழக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
![]()
|
அதிருப்தி
இந்த அதிருப்தியை, திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., போஸ்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது. 'விடியலை எதிர்பார்த்தோம்... ஏமாற்றமே உள்ளது' என்று தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில், போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோரிக்கை
அதில், '10 சதவீதம் போனஸ், 'நான்கு ஆண்டு ஊதிய ஒப்பந்தம், 'அரியர்' போன்றவை கிடையாது; ஓய்வூதிய பணப்பலன், பஞ்சப்படி உயர்வு தொடர்பான கோரிக்கை ஏற்கப்படவில்லை' என கூறப்பட்டுள்ளது.
கடைசி வரியில் '2024 தேர்தல் தொட்டுவிடும் துாரத்தில்' என, தங்களது எச்சரிக்கையை பகிரங்கமாக, தி.மு.க.,வுக்கு தெரிவித்துள்ளனர். இதனால், தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.