ஜெ.,க்கு கட்டுப்பாடின்றி உணவு

Added : அக் 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதா சாப்பிட்ட உணவு குறித்தும், விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம்:'பொட்டாசியம்' மற்றும் சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை, ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில் வைத்து கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. ஆனாலும், அவருக்கு எவ்விதமான கட்டுப்பாடுமின்றி, உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன என்பதை, உணவு அட்டவணையில் இருந்து
Apollo Hospital, Jayalalitha Death, Arumugasamy Commission, ஜெயலலிதா,  விசாரணை ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதா மரணம், ஆறுமுகசாமி கமிஷன், Jayalalitha,  Inquiry Commission , உணவு ,

மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதா சாப்பிட்ட உணவு குறித்தும், விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதன் விபரம்:


'பொட்டாசியம்' மற்றும் சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை, ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில் வைத்து கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. ஆனாலும், அவருக்கு எவ்விதமான கட்டுப்பாடுமின்றி, உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன என்பதை, உணவு அட்டவணையில் இருந்து காணலாம்.

உணவு தொடர்பாக, பல்வேறு ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ததில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உணவு, ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.

இச்சமயத்தில், டாக்டர் பாபு ஆபிரகாம், 'ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், மருத்துவமனையின் மற்ற நோயாளிகளைப் போல, அவரும் ஒரு சாதாரண நோயாளியாக இருந்திருப்பார்; மறைந்த முதல்வரை விட, செவிலியர்கள் அதிக அதிகாரம் செலுத்தியிருப்பர்' எனக் கூறியதை, ஆணையம் நினைவுகூருகிறது.

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்ததால், உணவு கட்டுப்பாட்டை, உணவியல் நிபுணரால் வலியுறுத்த முடியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

karthikeyan - male city,மாலத்தீவு
20-அக்-202223:47:49 IST Report Abuse
karthikeyan மேலே இருக்கும் படம் கடைசியாக அம்மையாரை மருத்துவமமையில் சேர்த்த படம் இல்லை, ஆனால் இதை காட்டித்தான் தமிழக மக்களை ஏமாற்றியுள்ளார் சதிகலா & குரூப், இட்லி சாப்பிடுகிறார், ஜூஸ் குடிக்கிறார் என்று.
Rate this:
Cancel
Srinivasan - Chennai,இந்தியா
20-அக்-202219:36:32 IST Report Abuse
Srinivasan எவனும் ஜெயா அம்மையாரின் மறைவை பொருட்படுத்துவதில்லை....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கட்டுமரம் காணாமல் போனதை கூட எவனும் பொருட்படுத்துவதில்லையே...
Rate this:
Cancel
19-அக்-202217:06:14 IST Report Abuse
அப்புசாமி டயபிடீஸ் வியாதி வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை மீறுகின்றனர். இந்த நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இப்படித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X