சென்னை: தமிழக பா.ஜ.,வினர் பதிவிட்டுள்ள, 'சேவ் அவர் தமிழ்' என்ற 'ஹேஷ்டேக்' பதிவு, முதலிடத்தை பிடித்தது.
மத்திய அரசு, ஹிந்தி மொழியை திணிப்பதாக கூறி, தி.மு.க.,வினர் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'மத்திய அரசு, எங்கேயும் ஹிந்தியை கட்டாய பாடமாக கொண்டு வரவில்லை. கொண்டு வரப் போவதும் இல்லை. மக்களிடம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்பவே, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது' என்றார்.
![]()
|
மேலும் அவர், 'தற்போதைய தலைமுறையினருக்கு தமிழ் தெரியாத சாதனையை தான் தி.மு.க., செய்திருக்கிறது; தமிழ் மொழியை காக்க வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வினர் டுவிட்டரில், 'சேவ் அவர் தமிழ்' ஹேஷ்டேக்கை பதிவிட்டு, அதில் தமிழை காப்பாற்ற எடுக்க வேண்டியவை குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் நேற்று, 'டுவிட்டர் டிரெண்டிங்கில்' முதலிடத்தை பிடித்தது.