தூத்துக்குடி: தூத்துக்குடி, அழகேசபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சூரிய நாரயணன்(42), என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து கிடைக்கபெற்ற ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள், அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரை கைது செய்து சிறுத்தை தோலை போலீசார் பறிமுதல் செய்தனர்.