சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உடல் நலம் காட்டும் உடை

Added : அக் 20, 2022 | |
Advertisement
ஒருவர் எங்கிருந்தாலும், அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதில் ஒன்றுதான், அணியும் உடைகளையே உடல்நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றும் நுட்பம்.லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியின் ஆராய்ச்சியாளர்கள், 'பெக்கோடெக்ஸ்' என்ற ஒரு துணி வகையை உருவாக்கியுள்ளனர். இந்த துணி முழுதும் பருத்தி இழைகளால் ஆனது என்றாலும், இதன் ஊடுபாவாக, 10 வகை
PECOTEX, Health,  London, உடல்நலம், பெக்கோடெக்ஸ், இம்பீரியல் கல்லுாரி, லண்டன்,  Imperial College, sensors Tshirts, sensors  face masks

ஒருவர் எங்கிருந்தாலும், அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதில் ஒன்றுதான், அணியும் உடைகளையே உடல்நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றும் நுட்பம்.

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியின் ஆராய்ச்சியாளர்கள், 'பெக்கோடெக்ஸ்' என்ற ஒரு துணி வகையை உருவாக்கியுள்ளனர். இந்த துணி முழுதும் பருத்தி இழைகளால் ஆனது என்றாலும், இதன் ஊடுபாவாக, 10 வகை மின்னணு உணரிகளை வைத்து நெய்யப்பட்டது.

இதனால், ஒருவரது உடல் நிலை குறித்த 10 வகை அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்து அறிய முடியும். இந்த உணரிகள் தரும் தகவல்களை மொபைல் செயலி மூலம் சேகரித்து அறியலாம்.

பெக்கோடெக்சை வைத்து தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணிந்தவரின் சுவாசத்தை அலசி உடல் நிலையை அறியலாம்.

பெக்கோடெக்சால் ஆன டி-ஷர்டில் சில உணரிகளை மாற்றி வைப்பதன் மூலம் இதயத்துடிப்பு முதல் பலவகை அறிகுறிகளை அலச முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X