வரை கலைத் துறையில் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களான 'டாலி-2', மிட்ஜர்னி', போன்றவை அண்மையில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன.
இந்நிலையில் எழுத்துத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு புகுந்து கலக்கி வருகிறது. இணைய தளம், வலைப் பக்கம், சமூக இணைய தளம் என்று பலவற்றுக்கும் புதிய கட்டுரைகள் தேவைப்படுகிறது.
இந்த தேவையை நிரப்ப, இப்போது 'ஜாஸ்பர்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வந்துவிட்டது.
இதற்கு சந்தா கட்டியவர்களுக்கு, வேண்டிய தலைப்பில், வேண்டிய நீளத்தில், விருப்பமான நடையில் கட்டுரைகளை சில நொடிகளில் தயாரித்துத் தருகிறது ஜாஸ்பர்.
எளிய செய்திக் கட்டுரைகள், பத்திரிகைகளுக்கான சுவாரசியக் கட்டுரைகள் மற்றும் சீரியசான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரை ஜாஸ்பர் மென்பொருளால் ஆங்கிலத்தில் தயாரித்துத் தர முடியும்.
இதன் சந்தாதாரர், ஜாஸ்பரை கையாள மென்பொருள் அறிவு தேவையில்லை.
சாதாரண பேச்சு மொழியிலேேய தங்கள் தேவையை ஜாஸ்பரிடம் தெரிவித்தால் போதும்.
எழுதுவதற்கு உதவும் 'டாப்' 10 செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் பட்டியலில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது ஜாஸ்பர். இது அறிமுகமாகி ஒராண்டுக்குள் 70 ஆயிரம் சந்தாதாரர்களையும் ஈர்த்திருக்கிறது.