சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அதேபோல், சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 3 தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி ஆக இருந்த லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.