வெள்ளகோவில் அருகே டூவீலரில், ௧.௩௫ லட்சம் ரூபாயை திருடிய களவாணிகளை, போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில் அருகேயுள்ள புள்ளசெலிபாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 57, விவசாயி. கடந்த, 17ம் தேதி வெள்ளக்கோவிலில் ஒரு வங்கிக்கு சென்று, ஒரு லட்சம் ரூபாய் எடுத்தார். பின் வெள்ளகோவில் யூனியன் அலுவலகம் சென்றார். அப்போது தான் ஏற்கனவே வைத்திருந்த, ௩௫ ஆயிரம் ரூபாயை சேர்த்து, ௧.௩௫ லட்சம் ரூபாயை, டூவீலரின் இருக்கை அடியில் வைத்து சென்றார். அங்கு வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, பணத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் வெள்ளகோவில் போலீசில் புகாரளித்தார். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் சந்தேகத்துக்கு இடமாக சிக்கிய இருவரை பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை செந்தில்குமார், 35, சங்கப்பேட்டை ராஜ்குமார், 25, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.