இம்ரான் கான் தகுதி நீக்கம்: பாக்., தேர்தல் ஆணையம் அதிரடி| Dinamalar

இம்ரான் கான் தகுதி நீக்கம்: பாக்., தேர்தல் ஆணையம் அதிரடி

Updated : அக் 22, 2022 | Added : அக் 21, 2022 | கருத்துகள் (7) | |
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பொது பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பின்னர்
Pakistan, Election Commission, Disqualifies, Imran Khan, MNA, Toshakhana Case, இம்ரான் கான், பாகிஸ்தான், தேர்தல் ஆணையம், தகுதிநீக்கம், தோஷகானா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பொது பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பின்னர் அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததை



அடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. அவரும் பதவி விலகினார். இந்நிலையில் இம்ரான் கான், தவறான பிரமாண பத்திரத்தை சமர்பித்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கானின் வழக்கறிஞர் அலி ஜாபர், 2018-19ல் பரிசு பொருட்களை விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.




latest tamil news

அரசு அதிகாரிகளால் பெறப்பட்ட பரிசுகள் தோஷகானாவில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும், அவற்றின் மதிப்பை மதிப்பிட வேண்டும். மதிப்பீட்டுக்கு பின்னரே குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்த பிறகு, பரிசு பொருட்களை விரும்பினால் எடுத்து செல்ல முடியும். ஆனால் இம்ரான் கான் பதவி விலகியதை அடுத்து கடந்த ஆகஸ்டில் அரசு கருவூலத்தில் இருந்து தோஷ்கானாவிற்கு பணம் செலுத்தாமல் சில பரிசு பொருட்களையும் எடுத்து சென்றுள்ளார்.



அவற்றின் விவரங்களையும் வெளியிட மறுத்துள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக இம்ரான் கானை பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



தோஷகானா

தோஷகானா என்பது 1974-ல் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் அமைச்சரவைப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான துறையாகும். இதன் முக்கிய நோக்கம் பார்லிமென்ட் உறுப்பினர்கள், அமைச்சர்கள், வெளியுறவு செயலாளர்கள், அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் பெறும் பரிசுகளை வைத்திருப்பதாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X