புதுடில்லி: கீதையிலும் கிருஷ்ணர் அர்ஜூனனிடம் ஜிகாத் பற்றி பேசுகிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸின் சிவராஜ் பாட்டில் கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவரின் கருத்துக்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
![]()
|
முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் மோஷினா கித்வாய் என்பவரின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் நூலான மை லைப் இந்தியன் பொலிடிக்கல் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கலந்து கொண்டார். மேலும் விழாவில் சசிதரூர், சுஷில்குமார் ஷிண்டே, மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிவராஜ்பாட்டீல், இஸ்லாம் மதத்தில் ஜிகாத் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. இந்து மத காவியமான மகாபாரதத்திலும் கிருஷ்ணர் அர்ஜூனனிடம் ஜிகாத் பாடங்களை கற்று கொடுத்து உள்ளார். கிறிஸ்துவ மத்திலும் உள்ளது. என கூறி இருந்தார்.
முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் விளையாடுகிறது என குற்றம் சாட்டி உள்ளது. பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி., சுதன்ஷூ திரிவேதி கூறுகையில் பாட்டீலின் அறிக்கை காங்கிரஸ் கட்சியின் கேவலமான மனநிலையை பிரதிபலிக்கிறது.
பாலகங்காதர திலகர் கீதையில் யோக சாஸ்திராத்தை பார்த்தார். மகாத்மா காந்தி அனாசக்தியை பார்த்தார். ஆனால் ராகுல் காங்கிரஸ் கட்சியினர் அதில் ஜிஹாத்தை பார்க்கின்றனர். என்றார்.
மேலும் சிவராஜ் பாட்டீல் எந்த பகவத்கீதைய படித்தார் என தெரியவில்லை என்ற விஷ்வஹிந்து பரிஷத் தலைவர் மிலிந்த் பரண்டே கூறி உள்ளார்.
![]()
|
இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் பகவத்கீதை இந்திய நாகரிகத்தின் முக்கிய அடித்தளமாகும்.என்னுடை முன்னாள் சகாவான சிவராஜ் பாட்டீல் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதது. பகவத் கீதை குறித்து முன்னாள் பிரதமர் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியாவில் கூறி இருப்பதை காங்கிரஸ் தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளது என கூறி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement