கோழிக்கோடு : ஹிந்தி திணிக்கப்படுவதாக கேரள அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில், 100 சதவீதம் ஹிந்தி கற்றோர் உள்ள புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று பார்லிமென்ட் குழு சமீபத்தில் பரிந்துரைத்திருந்தது.
ஹிந்தியை திணிக்க முயல்வதாக, தமிழகம் மற்றும் கேரள அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமூக வலை தளங்களிலும் இது தொடர்பான விவாதம் நடந்து வருகிறது.
![]()
|
வரும், ஜனவரியில் குடியரசு தினத்தின்போது, இந்த கிராமத்தை முழு ஹிந்தி கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இது குறித்து இந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த கிராமத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்களுடன் பேசுவதற்கு வசதியாக, ஹிந்தியை கற்றுக் கொள்வது குறித்து யோசித்தோம்.
இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு அனைவருக்கும் ஹிந்தி கற்றுத் தரும் முயற்சி துவங்கியது.
இந்த திட்டத்தின் கீழ், 20 - 70 வயதுடைய அனைவரும், ஹிந்தியில் குறைந்தபட்சம் எழுத, படிக்க, பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
பல்வேறு அமைப்புகள், ஹிந்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பில் இது சாத்தியமானது. இந்த திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட பலரும் தாங்களாகவே ஆர்வத்துடன் வந்து ஹிந்தி கற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.