வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இன்று தீபாவளி பண்டிகை (24.10.22) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்களின் புனித நாளாக கருதப்படும் தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று வருகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலை எழுந்து தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். கங்கா ஸ்நானம் முடித்து இறைவனை வழிபட்டு புத்தாடை அணிவார்கள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள் பெண்கள் விதவிதமான பலகாரங்கள் இனிப்பு மற்றும் உணவு வகைகளை தயார் செய்து தீபாவளி பண்டிகையை வரவேற்பார்கள் .இந்நன்னாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள்.
மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்தினரை சேர்ந்தவர்களுக்கும் மக்கள் இனிப்புகள் வழங்கி தங்களுடைய அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்து மதம் தவிர சீக்கியர்கள், ஜைன மதத்தினர் மற்றும் புத்த மதத்தினராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்து மதப்படி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக தீபாளி கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவசாம் முடிந்து நாடு திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாடெங்கிலும் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக இனிப்புகளை வாங்க மக்கள் உற்சாகம் காட்டி வந்தனர். வருடம் தோறும் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பண்டிகையொட்டிய நாட்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
தீமை எனும் இருள் போக்கி நன்மை எனும் ஒளி பெருகுவதை குறிக்கும் இந்நன்னாளில் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தினமலர்.காம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.