இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சீரமைக்க முடியாததால் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியேற்ற 45 நாட்களில் இம்முடிவை அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்ததற்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக ஆண்டுக்கு 1,15,000 பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி வழங்கப்பட இருக்கிறது.
