உலகம் முழுவதும் ஆளுமை பதவிகளில் அதிகரிக்கும் இந்தியர்கள்| Dinamalar

உலகம் முழுவதும் ஆளுமை பதவிகளில் அதிகரிக்கும் இந்தியர்கள்

Updated : அக் 25, 2022 | Added : அக் 25, 2022 | கருத்துகள் (43) | |
சென்னை: அமெரிக்க துணை அதிபர், போர்ச்சுகள் பிரதமர் என உலகம் முழுவதும் ஆளுமை பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த பட்டியலில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கும் இணைந்துள்ளார்.அவர்களின் பட்டியல் பின் வருமாறுஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரீஸ் உள்ளார்.
உலகம் முழுவதும் ஆளுமை பதவிகளில் அதிகரிக்கும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அமெரிக்க துணை அதிபர், போர்ச்சுகள் பிரதமர் என உலகம் முழுவதும் ஆளுமை பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த பட்டியலில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கும் இணைந்துள்ளார்.


அவர்களின் பட்டியல் பின் வருமாறு



அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ்


latest tamil news

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரீஸ் உள்ளார். தமிழகத்தை பூர்விமாக கொண்ட ஷியாமளா கோபாலன் மற்றும் ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் ஹாரீஸ் ஆகியோருக்கு, அமெரிக்காவின் ஆக்லாந்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவின் 49வது துணை அதிபராக பதவி வகிக்கிறார். அந்த பதவிக்கு தேர்வான முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.




பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்


latest tamil news

Advertisement

பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரகனுக சுனக்கின் பெற்றோர் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவரதுதந்தை கென்யாவிலும், தாயார் தான்சானியாவிலும் பிறந்தனர். இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து, கிழக்கு ஆப்ரிக்கா சென்று அங்கிருந்து 1960 களில் குடும்பத்துடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர்.



ரிஷி சுனக் 1980 ல் சவுத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை டாக்டராக இருந்தார். தாயார் சொந்தமாக மருந்தகம் நடத்தி வந்தார். வின்செஸ்டர் கல்லூரியில் படித்த இவர், தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு சென்றார். ஸ்டான்போர்டு பல்கலையில் எம்பிஏ படிக்கும் போது, இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளான அஷசிதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.




போர்ச்சுகல் துணை அதிபர் ஆன்டோனியோ கோஸ்டா


latest tamil news

போர்ச்சுகல் பிரதமராக ஆன்டோனியோ கோஸ்டா உள்ளார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். அவர், பாதி போர்த்துகீசியர். பாதி இந்தியர். இவரது தந்தை, கோவாவில் பிறந்து மொசாம்பிக்கில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர். கோஸ்டா, முதலில் மகநராட்சி துணை மேயராக பதவியேற்று அரசியல் வாழ்க்கையை துவக்கினார். பிறகு 1987 ல் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டார். 1988 ல் சட்டம் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 1997 முதல் 1999 வரை பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராகவும், 1999 முதல் 2002 வரை நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2007 ல் லிஸ்பன் நகர மேயராகவும் பதவி வகித்தார். 2013 வரை அந்த பதவியில் நீடித்தார். பிறகு போர்ச்சுகல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மேயர் பதவியை ராஜினாமா செய்தார். 2017 முதல் அன்டோனியா கோஸ்டா போர்ச்சுகல் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.




மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்


latest tamil news

2017 ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வரும் பிரவிந்த் ஜக்நாத்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய மூதாதையர்கள் உ.பி.,யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.



1987 ல் அரசியலில் நுழைந்த அவர், 2003 முதல் 2005 வரை விவசாய அமைச்சராகவும், 2003 முதல் 2005 வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2010 ல் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்தார். 2014 ல் எதிர்க்கட்சி தலைவராக வகித்த பிரவிந்த் ஜக்நாத், 2019 முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.




நியூசிலாந்து அமைச்சர்


latest tamil news

நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வ அமைச்சராக உள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர். கடந்த 1979 ல் சென்னையில் பிறந்த ஆவார். 2020 முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.



அவர்களை தவிர்த்து, அயர்லாந்து பிரதமராக இருந்த லியோ வரத்கர், பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவி வகித்த பிரிதி படேல் ஆகியோரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X